சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி சான்றிதழ் தயாராகிவிட்டாலும் அதிலும் ஒரு பிரச்சினை!
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள மருந்தகங்கள் ஜூன் 7ஆம் திகதி தடுப்பூசி சான்றிதழ் வழங்க தயாராகிவிட்டன. ஆனால், அதை ஜூலை வரை பயன்படுத்தமுடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இந்த தடுப்பூசி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படவேண்டுமானால், அது பெடரல் சுகாதார அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால், நாளொன்றிற்கு பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், அந்த பல்லாயிரக்கணக்கானோருக்கும் சான்றிதழ்கள் பதிவு செய்வது நடைமுறையில் கடினமான ஒரு விடயமாக உள்ளது.
ஆகவே, தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், அத்தனை பேருக்கும் சான்றிதழ் பதிவு செய்து வழங்க கால தாமதம் ஆகும் என்பதால், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சான்றிதழ் பெற காத்திருக்கவேண்டிய ஒரு நிலை உருவாகியுள்ளது.
சுவிஸ் மருத்துவர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவரான Michel Matter கூறும்போது,
ஜூன் மாத இறுதியில், மூன்று மில்லியன் மக்கள் வரை வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய
விரும்புவார்கள் என்றும், அவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் தேவைப்படும் என்றும்
தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.