70 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம்... பிரித்தானியாவில் உயிருக்கு போராடும் பாலஸ்தீன ஆர்வலர்
பிரித்தானியாவில் பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர் ஒருவர் 69 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் சார்ந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உயிர் விட்டுப்பிரியலாம்
யார்க்ஷயர் பகுதியில் அமைந்துள்ள HMP New Hall சிறையில் கடந்த 69 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார் 31 வயதான Heba Muraisi.

இந்த 69 நாட்களில் அவரது உடல் எடை 10 கிலோ குறைந்துள்ளது. மூச்சுவிடவும் போராடுகிறார், தொடர் தலைவலியால் அவதிப்படுகிறார். உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த 8 பேர்களில் ஐவர் தங்கள் உடல்நல அச்சங்களால் போராட்டத்தைக் கைவிட்டனர்.
பூக்கடைக்காரியாகவும், உயிர்காப்பாளராகவும் பணியாற்றிய முரைசி, தான் செய்ததாகக் கூறப்படும் குற்றங்களுக்கு உடனடி ஜாமீன் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நீதிமன்ற விசாரணையின் போது கைதிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக காவலில் இருந்திருக்கிறார்கள் என்று அவர்களின் சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.
சிறைச்சாலை அமைச்சர் லார்ட் டிம்ப்சன் கூறுகையில், அவர்கள் மீது மோசமான கொள்ளை மற்றும் குற்றச் சேதம் உள்ளிட்ட கடுமையான குற்றங்கள்' சுமத்தப்பட்டுள்ளன, மேலும் தடுப்புக்காவல் முடிவுகள் சுயாதீன நீதிபதிகளால் எடுக்கப்படுகின்றன என்றார்.
இதனிடையே, முரைசி தற்போது அவரது உடல்நலத்திற்கு நிரந்தர சேதம் மற்றும் மரண அபாயத்தில் உள்ளார் என்று ஒரு முன்னணி நரம்பியல் நிபுணர் கூறியுள்ளார். முரைசி தனது உயிர் எந்த நேரத்திலும் விட்டுப்பிரியலாம் என்பதை அறிந்திருக்கிறார் என்றே கூறுகின்றனர்.
Palestine Action அமைப்பின் 8 உறுப்பினர்கள் தொடக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1981ல் IRA போராளிகளில் 10 பேர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு மரணமடைந்ததன் பின்னர் பிரித்தானியாவில் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய போராட்டம் இதுவென்றே கூறுகின்றனர்.

உண்ணாவிரப் போராட்டத்தில்
இதில் ஐவர் விலகியுள்ள நிலையில் முரைசி உட்பட மூவர் மட்டும் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். முரைசியுடன் Teuta Hoxha மற்றும் Kamran Ahmad ஆகியோரும் இணைந்துள்ளனர்.
ஃபில்டனில் உள்ள எல்பிட் சிஸ்டம்ஸ் தொழிற்சாலையில் குற்றவியல் சேதம், மோசமான கொள்ளை மற்றும் வன்முறை சீர்குலைவு தொடர்பாக 13 மாதங்களாக Hoxha விசாரணைக் கைதியாக உள்ளார்.

இந்த நிலையில், Palestine Action அமைப்பின் மீது தடை நீக்கப்படும் வரையிலும், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்பும் நிறுவனங்களுக்கு பிரித்தானியா ஆதரவை நிறுத்தும் வரையிலும் தாங்கள் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மூவரும் கூறுகின்றனர்.
மேலும், தங்களுக்கு உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும் அல்லது குடும்ப உறுப்பினர்கள் சந்திக்கும் வகையில் வீட்டிற்கு அருகிலுள்ள சிறைகளுக்கு மாற்ற வேண்டும் என்றும் கோருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |