அடுத்த ஆண்டு கடினமான ஒன்றாக இருக்கும்: எச்சரிக்கும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
கனடா பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளலாம் என்பதைக் காட்டும் அறிகுறிகள் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு கடினமான ஒன்றாக இருக்கும் என எச்சரித்துள்ளார் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ!
சர்வதேச நாணய நிதியத்தின் எச்சரிக்கை
சர்வதேச நாணய நிதியம் இந்த மாத துவக்கத்தில் வெளியிட்ட நிதி நிலைமை அறிக்கை ஒன்றில், கனடா மிதமான பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Naresh777/Shutterstock
கோவிட், உக்ரைன் போர் முதலான பல்வேறு காரணங்களின் விளைவாக உயர்ந்துள்ள வட்டி விகிதம், அதிகரிக்கும் பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றால் கனேடியர்கள் திணறிப்போயிருக்கும் நிலையில், 2023ஆம் ஆண்டும் பெரிய முன்னேற்றம் எதுவும் இருக்கப்போவதில்லை என்றே தோன்றுகிறது.
கனடா பிரதமரின் எச்சரிக்கை
சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கூற்றும் அதற்கிசையத்தான் இருக்கிறது.
அடுத்த ஆண்டும் கடினமான ஒன்றாகத்தான் இருக்கும், அது கடினமான ஆண்டாக இருக்கப்போகிறது என்றார் அவர்.
ஆனாலும், கனேடியர்கள் ஒற்றுமையாக செயல்பட்டால் அதையும் கடந்துசெல்வார்கள் என்று கூறிய ட்ரூடோ, அரசு கனேடியர்களுக்கு நேரடி உதவிகள் வழங்கும் என்றும் கூறியுள்ளார்.