கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... நிதானம் தேவை: பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்
பிரித்தானியாவில் ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது அதிக மது அருந்த வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்கள்
பிரித்தானியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாதவகையில் 10,000 ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதியம் மற்றும் நிபந்தனைகள் தொடர்பில் இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
@reuters
இந்த வாரத்தில் செவிலியர்கள் இரண்டாவது நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே, தற்போது ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்களும் வேலை நிறுத்தத்தை முன்னெடுத்துள்ளனர்.
நோயாளிகளின் உயிருக்கு சிக்கலை ஏற்படுத்தும் விவகாரம் இதுவென சுகாதார செயலாளர் ஸ்டீவன் பார்க்லே எச்சரித்துள்ளார். இதனிடையே, ஆம்புலன்ஸ் சேவையை அதிகமாக பயன்படுத்துவோர் மது அருந்துவோர் என குறிப்பிட்டுள்ள NHS கூட்டமைப்பின் தலைவர் மேத்யூ டெய்லர்,
அரசாங்கம் வைத்த கோரிக்கை
மக்கள் அதிகமாக மது அருந்தாமல் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதே கோரிக்கையை அரசாங்கமும் இந்த வாரம் முன்வைத்திருந்தது. அதிக மது அருந்தவோ, தேவையின்றி கார் சவாரி மேற்கொள்ளவோ, கடும் குளீர்காலத்தில் வெளியே செல்லவோ வேண்டாம் என சுட்டிக்காட்டியுள்ளது.
@rex
மேலும், தற்போதைய சூழலில் ஆம்புலன்ஸ் சேவையை எதிர்பார்ப்பவர்கள் காத்திருந்து ஏமாறாமல் வாடகை டாக்ஸி பதிவு செய்து மருத்துவமனைக்கு செல்லவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.