தேர்தல் முடிவுகள் உள்நாட்டுப் போரைத் தூண்டலாம்... தீவிர கண்காணிப்பில் வெள்ளைமாளிகை
அமெரிக்க தேர்தல் முடிவுகள் உள்நாட்டுப் போரைத் தூண்ட வாய்ப்பிருப்பதாக தகவல் கசிந்துள்ள நிலையில், வெள்ளைமாளிகையில் அதன் அறிகுறிகள் தென்படுவதாக கூறுகின்றனர்.
அதிகாரிகள் அஞ்சுகின்றனர்
தேர்தல் பரப்புரையின் போது நடத்தப்பட்ட படுகொலை முயற்சிகள், கூச்சல் குழப்பங்கள் மற்றும் வாக்குப்பெட்டிகளுக்கு தீ வைப்பு என அசம்பாவிதங்கள் தொடர்வதால் 2020 வாக்கெடுப்புக்குப் பிறகு ஏற்பட்டதைப் போன்ற ஒரு வீழ்ச்சியை எதிர்பார்த்து அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
திங்களன்று வெள்ளைமாளிகையில் பாதுகாப்பு அரண் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. அத்துடன், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் குடியிருப்பு வளாகம், வாஷிங்டனில் அமைந்துள்ள வேறு முதன்மையான கட்டிடங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, வாக்குச் சாவடிகளில் வன்முறை வெடித்துள்ளதை அடுத்து தேர்தல் ஊழியர்கள் துப்பாக்கி வன்முறைக்கு தயாராகி வருகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் நாளுக்கு முன்னதாக அரசியல் கட்சி அலுவலகங்கள் மற்றும் பிற முக்கிய இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யப் போவதாக எண்ணற்ற மிரட்டல்கள் வந்துள்ளன.
25 சதவிகித மக்கள் கருத்து
இதனிடையே, வாக்காளர்களால் எப்போதும் வன்முறை ஏற்படும் வரலாற்றைக் கொண்ட மாகாணங்களில் காவல்துறை மற்றும் காவல்படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
மட்டுமின்றி, தேர்தல் வன்முறையாக மாறி பெரிய மோதலாக மாறக்கூடும் என்று பல அமெரிக்க மக்கள் அஞ்சுகின்றனர். யார் வெற்றிபெற்றாலும் அதைப் பொருட்படுத்தாமல் கலவரம் நடக்கும் என்று 25 சதவிகித மக்கள் கருதுகிறார்கள்.
தேர்தல் வன்முறைகள் உள்நாட்டுப் போரில் முடியக்கூடும் என்று 10 சதவிகித அமெரிக்க மக்கள் கவலைப்படுகிறார்கள்.
இதனிடையே, பென்சின்வானியா மாகாணத்தில் தேர்தல் முறைகேடு என தனது ஆதரவாளர்களை ஆத்திரமூட்டும் செயல்களில் டொனால்டு ட்ரம்ப் களமிறங்கியுள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் 50 சதவிகித ஆதரவுடன் வெற்றிவாய்ப்பில் கமலா ஹரிஸ் முன்னிலையில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |