ஸ்மார்ட் போன் வரலாற்றில் இதுவே முதல்முறை! Apple iphone 15ன் சிறப்பம்சங்கள்
Apple iphone 15 Series மொபைல்கள் கடந்த செப் 12ம் தேதி வெளியாகின.
அதில் iphone 15, iphone 15 plus , iphone 15 pro மற்றும் iphone 15 pro max ஆகிய மாடல்கள் இடம்பெற்றிருந்தன.
இதன் தனித்துவமான சிறப்பம்சங்கள், இதுவரை வெளியான Smartphone களில் இல்லாத பல சிறப்பம்சங்கள் இந்த iphone 15ல் இடம்பெற்றுள்ளது.
iPhone15 Pro Mobile processor
iPhone15 Pro மற்றும் iPhone15 Pro Max ஆகிய இரண்டு மொபைல்களிலும் A17 Pro processor பொறுத்தப்பட்டுள்ளது.
இந்த processor தான் உலகின் முதல் 3nm processor ஆகும். இந்த Chipset கொண்டு வெளியாகும் முதல் Smartphone இதுவே ஆகும்.
iPhone15 Series camera
சாதாரண ஸ்மார்ட்போன்களில் Pixel pinning 12MPயாக இருக்கும் நிலையில், iPhone15 சீரிஸ் மொபைல்களில் 24MP வழங்கப்பட்டுள்ளது.
இது தெளிவான மற்றும் துல்லியமான Photoகளை எடுக்க உதவுகிறது.
Titanium frame
iPhone15 Pro மற்றும் iPhone15 Pro Max ஆகிய இரண்டு மொபைகளிலும் Tec துறையில் முதன்முறையாக Aluminum - Titanium கலந்த frame இடம்பெற்றுள்ளது.
இது மொபைலை எடை குறைந்தும், நீடித்த உழைப்பிற்கும் உதவும். மேலும், இந்த frame 100% மறுசுழற்சி செய்யப்பட்ட Aluminum கொண்டு உருவாக்கப்பட்டது என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
Action Button
பொதுவாக நமது Lock screen button கொண்டு பல Smartphoneகளில் Selfie photo க்கள் கூட எடுக்க முடியும்.
ஆனால், தற்போது iPhone Series Mobileகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Action Button மூலம் Camera shooter, Voice recording உள்ளிட்ட பல்வேறு வேலைகளை ஒரே Button மூலம் செய்து கொள்ள முடியும்.
Wireless charging
Qi 2 Wireless charging இந்தாண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அதை கொண்டு வெளியாகியுள்ள முதல் Smartphone என்ற பெயரை பெற்றுள்ளது இந்த iPhone15 Series மொபைல்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |