கடைக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்கி வெறுத்துப்போனவர்... ரூ 83,270 கோடி நிறுவனம் உருவான கதை
கனடாவில் சொந்தமாக கார் இல்லாததால், கடும் குளிரில் கடைக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்கி வெறுத்துப் போன நபர் உருவாக்கிய நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு ரூ 83,270 கோடி.
கடும் குளிரில் மளிகை பொருட்கள்
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த Apoorva Mehta தமது பெற்றோருடன் ஆப்பிரிக்க நாடான லிபியாவுக்கு குடிபெயர்ந்தார். ஆனால் கல்லூரி வாழ்க்கையை கனடாவில் செலவிட முடிவு செய்த அபூர்வா மேத்தா, பல இந்திய மாணவர்கள் போன்று கல்விக்காக கனடாவுக்கு இடம்பெயர்ந்துள்ளார்.
கனடாவில் பொறியியல் பட்டம் பெற்ற மேத்தா Amazon, Blackberry மற்றும் Qualcomm உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். ஆனால் 2010ல் தமது வேலையை விட்டுவிட்ட மேத்தா, தனியாக ஒரு நிறுவனத்தை தொடங்க ஆசைப்பட்டார்.
இதனையடுத்து ஒவ்வொன்றாக 20 நிறுவனங்களை தொடங்குவதும் மூடுவதுமாக காலம் கடந்தது. இந்த நிலையில் தான், சொந்தமாக கார் எதுவும் இல்லாத மேத்தா கனடாவின் கடும் குளிரில் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு பல நாட்கள் பேருந்தில் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பாட்டர்.
ஒரு நாள், குடியிருப்பில் தனியாக சிக்கிக்கொள்ள, அன்றைய நாள் மளிகை பொருட்கள் அனைத்தும் தீர்ந்துவிட, அப்போது முடிவு செய்துள்ளார், மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் நிறுவனம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று.
7.7 மில்லியன் வாடிக்கையாளர்களுடன்
இதனையடுத்து San Francisco நகருக்கு திரும்பிய மேத்தா தமது நண்பர்கள் இருவருடன் இணைந்து Instacart என்ற நிறுவனத்தை தொடங்கினார். தொடக்க நாட்களில் வாடகை டாக்ஸியில் வாடிக்கையாளர்களுக்கு மளிகை பொருட்களை விநியோகம் செய்துள்ளார் மேத்தா.
தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் 7.7 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் 80,000 சில்லறை வர்த்தக கூட்டமைப்பை கொண்டுள்ளது Instacart நிறுவனம். கொரோனா காலகட்டத்தில் Instacart நிறுவனத்தின் சந்தை மதிப்பானது உச்சம் கண்டது.
2021 மார்ச் மாதம் Instacart நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 3.9 பில்லியன் டொலராக அதிகரித்தது. இதன் பிறகு 5 மாதங்களில் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பொறுப்பில் இருந்து மேத்தா விலகியுள்ளார்.
அத்துடன் பொதுத்துறை நிறுவனமாக Instacart அறிமுகமான பின்னர், மேத்தா சுமார் 1.1 பில்லியன் அளவுக்கு வருவாய் ஈட்டியுள்ளார். கடைக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்கி வெறுத்துப்போன மேத்தாவின் தற்போதைய சொத்துமதிப்பு என்பது இந்திய மதிப்பில் ரூ 8327 கோடி என்றே தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |