ஒரே நாளில் 50 பேர்கள்... நெருக்கடியில் சுவிஸ் புகலிடம் கோருவோர் மையம்
சுவிட்சர்லாந்தின் பாசலில் அமைந்துள்ள புகலிடம் கோருவோர் மையத்தில் ஒரே நாளில் 50 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெடரல் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் புகலிடம் கோருவோர் மையத்தில், வெள்ளிக்கிழமை வரையில் 50 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மொத்த மையமும் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, 100 பேர்களை தனிமைப்படுத்த கோரியுள்ளனர். குறித்த மையத்தில் மொத்தம் 152 பேர்கள் தங்கி இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, குறித்த மையம் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் பலர் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். மிக மோசமான நிலையிலேயே அந்த மையம் செயல்பட்டு வருவதாகவும், சுகாதாரம் பேணப்படுவதில்லை எனவும், அதனாலையே ஒரே நாளில் 50 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யும் நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
புகலிடம் கோரும் மையத்தில் ஒரே நாளில் 50 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பாஸலில் மட்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 88 என அதிகரித்துள்ளது.
இதனிடையே, புகலிடம் கோருவோர் மையத்தில் பெரும்பாலானவர்களுக்கு லேசான அறிகுறிகளே எனவும், இதனால் ஒன்றாகவே கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தனிமைப்படுத்தலில் இருப்பவர் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாநில முதன்மை மருத்துவர் தெரிவித்துள்ளார்.