நேட்டோ அமைப்புடன் ஒத்துழைப்புக்கு சுவிட்சர்லாந்திலேயே எதிர்ப்பு: அரசு விடுத்துள்ள கோரிக்கை
உக்ரைன் ரஷ்யப்போரால், நடுநிலை நாடு என அழைக்கப்படும் சுவிட்சர்லாந்திலேயே ஒருபக்கம் நேட்டோ அமைப்புடன் ஒத்துழைக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துவருகிறது.
அதே நேரத்தில், சுவிட்சர்லாந்து நடுநிலையாகவே நீடிக்கவேண்டும் என சுவிட்சர்லாந்தின் அரசியல் கட்சிகளில் ஒன்றான சுவிஸ் மக்கள் கட்சி பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளது.
சுவிட்சர்லாந்து, நேட்டோ போன்ற எந்த ராணுவ அமைப்புடனும் இணையக்கூடாது என்கிறது அந்த பிரேரணை.
அரசு விடுத்துள்ள கோரிக்கை
ஆனால், அந்த பிரேரணையை மக்கள் புறக்கணிக்கவேண்டும் என ஆளும் பெடரல் கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது.
சுவிஸ் வெளியுறவு அமைச்சரான Ignazio Cassis, நடுநிலைத்தன்மை என்பது சூழலுக்கு ஏற்ப மாறக்கூடியதாக இருக்கவேண்டும் என்றும், சுவிட்சர்லாந்தை நடுநிலை நாடாகக் கருதாத ஒரே நாடு ரஷ்யாதான் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், சுவிட்சர்லாந்து நேட்டோ அமைப்புடன் கொஞ்சமாவது ஒத்துழைப்பு கொடுக்கவில்லையென்றால், நாட்டின் பாதுகாப்புக்கு அது ஆபத்து என சுவிஸ் அரசு நம்புகிறது.
ஆனால், சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்துள்ள பிரேரணையில் இதுவரை 130,000 பேர் கையெழுத்திட்டுவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |