நான்காவது தடுப்பூசிக்கு தயாராகும் சுவிட்சர்லாந்து? நிபுணர்கள் கோரிக்கை
சுவிட்சர்லாந்தில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில், நான்காவது தடுப்பூசிக்கு பெடரல் நிர்வாகம் தயாராக வேண்டும் என்ற கோரிக்கை நிபுணர்கள் தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பெருந்தொற்றின் புதிய மாறுபாடான ஓமிக்ரான் பரவல் அதிகரித்தே காணப்படுகிறது.
மட்டுமின்றி, இரண்டு முறை தடுப்பூசி போடப்பட்டவர்கள் மற்றும் குணமடைந்தவர்கள் கிட்டத்தட்ட தடுப்பூசி போடாதவர்களைப் போலவே ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் பூஸ்டர் தடுப்பூசியால் குறிப்பிட்ட அளவுக்கு பயன் இருப்பதாக நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், பைசர் நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 10வது வாரத்தில் இருந்து ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து அதன் பாதுகாப்பு 50 சதவீதத்திற்கு கீழ் சரிவடைந்துள்ளதாக பிரித்தானிய நிபுணர்கள் தரப்பு கண்டறிந்துள்ளனர்.
இந்த நிலையிலேயே, இஸ்ரேல் நாடு போன்று சுவிட்சர்லாந்தும் நான்காவது தடுப்பூசிக்கு அல்லது இரண்டாவது பூஸ்டர் டோசுக்கு தயாராக வேண்டும் என நிபுணர்கள் தரப்பு கோரிக்கை முன்வைத்துள்ளது.
பைசர் நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசியின் பாதுகாப்புத்திறன் 50% அளவுக்கு சரிவடைந்துள்ள நிலையில், மிக ஆபத்து வளையத்தில் இருப்பவர்கள் முதியவர்கள் ஆகியோருக்கு நான்காவது தடுப்பூசியை பரிந்துரைக்கலாம் என பாஸல் பல்கலைக்கழகத்தில் சுகாதாரப் பொருளாதார நிபுணர் Stefan Felder குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி பெடர்ல நிர்வாகம் தற்போது மார்டர்னா நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய முன்வர வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.