சுவிட்சர்லாந்தில் மருத்துவமனைகள் ஸ்தம்பிக்கலாம்: கடும் நடவடிக்கைகளுக்கு பரிந்துரை
பெடரல் அரசின் கொரோனா பணிக்குழுவானது தயார் செய்துள்ள 23 பக்க அறிக்கையில் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதில், டிசம்பர் மாதத்தில் சுவிட்சர்லாந்தின் மருத்துவமனைகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படலாம் என குறிப்பிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் ஒவ்வொரு வாரமும் கொரோனா பாதிப்பு என்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்து வரும் நிலையில், புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தற்போது வாரத்திற்கு 40 சதவீதம் அதிகரித்து வருகிறது.
இதனால் டிசம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயரும் என எதிர்பார்ப்பதாக கொரோனா பணிக்குழு எச்சரித்துள்ளது.
மேலும், அவசர சிகிச்சை பிரிவில் 300 அல்லது அதற்கு மேல் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தால், உண்மையில் நிலைமை கவலைக்கிடமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களால் 90 முதல் 95 சதவீதம் மருத்துவமனையை நாடும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.