கடலுக்குள் கட்டப்படும் மிகப்பெரிய சுரங்கப்பாதை., ஜேர்மனி டு டென்மார்க் 7 நிமிடத்தில் பயணம்
ஐரோப்பாவில் மிகப்பெரிய கட்டுமான திட்டங்களில் ஒன்றான Fehmarnbelt Tunnel தற்போது கடலுக்குள் அமைந்துள்ள உலகின் நீளமான சுரங்கப்பாதையாக உருவாகி வருகிறது.
ஜேர்மனி மற்றும் டென்மார்க்கை நேரடியாக இணைக்கும் இந்த சுரங்கப்பாதை, பால்டிக் கடலுக்குக் கீழே சுமார் 18 கிலோமீட்டர் நீளத்தில் கட்டப்படுகிறது.
தற்போது கடலைக் கடக்க சுமார் 60 நிமிடங்கள் ஆகிறது. ஆனால் இந்த துறைமுகம் முடிந்தவுடன் ரயிலில் வெறும் 7 நிமிடங்களில் பயணம் செய்ய முடியும்.
இது சுற்றுலா பயணிகளுக்கும் வணிகத்துறைக்கும் மிகப்பெரிய நன்மையை அளிக்கும். இந்த சுரங்கப்பாதை பாரம்பரிய முறையில் தோண்டப்படவில்லை.

பெரிய பகுதிகள் நிலத்தில் கட்டப்பட்டு, பின்னர் கடலுக்குள் மூழ்கடிக்கப்படுகின்றன. 2026 மே மாதத்தில், 217 மீட்டர் நீளமும் 73,000 டன் எடையும் கொண்ட முதல் பகுதி வெற்றிகரமாக கடலுக்குள் பொருத்தப்பட்டது.
இந்தப் பகுதியை 3 மில்லிமீட்டர் Error Limit-க்குள் பொருத்துவது மிகப்பெரிய பொறியியல் சவாலாக இருந்தது. இது நவீன தொழில்நுட்பத்தின் சிறந்த உதாரணமாகக் கருதப்படுகிறது.
இந்த திட்டம் 2029-ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முடிந்தவுடன், ஜேர்மனி-டென்மார்க் இடையேயான போக்குவரத்து வலையமைப்பில் புதிய அத்தியாயம் தொடங்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |