உயிரிழந்த பெண் நோயாளி... கமெராவில் சிக்கிய மருத்துவ உதவியாளர்
இங்கிலாந்தில் பெண்மணி ஒருவர் தோட்டத்தில் மயங்கி விழுந்து, பின் உயிரிழந்த நிலையில், அவருக்கு உதவ வந்த மருத்துவ உதவியாளர் ஒருவர் செய்த மோசமான செயல் ஒன்று கமெராவில் சிக்கியது.
இங்கிலாந்திலுள்ள வீடு ஒன்றில் 94 வயது பெண்மணி ஒருவர் தோட்டத்தில் மயங்கிவிழுந்தார். உடனடியாக அங்கு விரைந்த மருத்துவ உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற போராடியுள்ளார்கள். 20 நிமிடம் முயற்சித்தும் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற அவர்களால் முடியவில்லை.
வேலியே பயிரை மேய்ந்த கதை!
இந்நிலையில், வேலியே பயிரை மேய்ந்த கதையாக, மருத்துவ உதவியாளர்களில் ஒருவரான Mark Titley (58) என்பவர், அந்தப் பெண்மணியின் அறைக்குள் நுழைந்து, அங்கிருந்த மேசை ஒன்றிலிருந்து 60 பவுண்டுகளைத் திருடி தன் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால், அங்கு கமெரா இருப்பதைக் கவனித்ததும், எடுத்த பணத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு வெளியே வந்துவிட்டார் அவர்.
ஆனால், அந்தப் பெண்மணியின் மகன் கமெராவில் இந்தக் காட்சியைக் கண்டு பொலிசாரிடம் தெரிவித்துவிட்டார்.
Titleyக்கு 18 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 120 மணி நேரம் ஊதியமில்லா பணி செய்யவும், இழப்பீடு முதலான விடயங்களுக்காக 717 பவுண்டுகள் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த சம்பவம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து Titley தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.