வெளிநாட்டில் வாழும் சுவிஸ் நாட்டவர் மீது பெண் மருத்துவர் குற்றச்சாட்டு
வெளிநாட்டில் வாழும் சுவிஸ் நாட்டவர் ஒருவர் தன்னைத் தாக்கியதாக, அந்நாட்டுப் பெண் மருத்துவர் ஒருவர் பொலிசில் புகாரளித்துள்ளார்.
சுவிஸ் நாட்டவர் மீது பெண் மருத்துவர் குற்றச்சாட்டு
சுவிஸ் நாட்டவரான Urs Fehr (45), தாய்லாந்து நாட்டவரான தனது மனைவியுடன், தாய்லாந்திலுள்ள Phuket நகரில் வாழ்ந்துவருகிறார். இவர், அந்நகரில் யானைகள் காப்பகம் ஒன்றை நடத்திவருகிறார்.
இந்நிலையில், கடந்த மாதம், அதாவது, பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி, Urs Fehr தன்னை தாக்கியதாக Tarndao Chandam (26) எனும் பெண் மருத்துவர் பொலிசில் புகாரளித்துள்ளார். அதற்கு ஆதாரமாக மருத்துவச் சான்றிதழையும் அவர் பொலிசில் சமர்ப்பித்துள்ளார்.
சுவிஸ் நாட்டவர் அளித்துள்ள விளக்கம்
இந்நிலையில், முதலில் தான் தடுக்கி விழும்போது தன் கால் அந்தப் பெண் மருத்துவர் மீது பட்டுவிட்டதாக கூறியிருந்த Urs Fehr, அவர் அந்தப் பெண்ணைத் தாக்கும் காட்சிகள் சமூக ஊடகத்தில் வெளியாகி பிரச்சினை பெரிதான பின், பொலிஸ் விசாரணையின்போது, அந்தப் பெண்ணை வேறொருவர் என்று தவறாக நினைத்து தாக்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
அதாவது, சமீபத்தில் ஒரு நாள், தன் மனைவி வீட்டில் தனியாக இருக்கும்போது, சீனர்கள் சிலர் அவருக்கு தொந்தரவு கொடுத்ததாகவும், அவர்கள்தான் மீண்டும் வந்துவிட்டார்களோ என்று தவறாக எண்ணி, தன் வீட்டின் முன்னால் உள்ள படிக்கட்டுகலில் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணை தான் தாக்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் Urs Fehr.
Urs Fehrம் அவரது மனைவியும் அந்தப் பெண் மருத்துவரிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்கள். ஆனால், அவர் என்ன முடிவு செய்துள்ளார் என்பது தெரியவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |