பேருந்தில் இளம்பெண்ணிடம் மோசமாக நடந்துகொண்ட நபருக்கு நேர்ந்த கதி: வெளியாகியுள்ள வீடியோ
பிரேசில் நாட்டில், இளம்பெண் ஒருவரிடம் ஆபாசமாக நடந்து கொண்ட ஒருவர் வகையாக வாங்கிக் கட்டிக்கொண்டார்.
பிரேசிலில் உள்ள Belem என்ற இடத்தில், பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார் இளம்பெண் ஒருவர்.
அப்போது அவருக்குப் பின்னால் நின்ற ஒரு ஆண் அவரிடம் ஆபாசமாக நடந்துகொண்டுள்ளார். தொடர்ந்து அவர் அந்த பெண்ணுக்கு வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுக்கவே, சட்டென அவரது கழுத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்டார் அந்த பெண்.
உண்மையில் அவர் இருவகை தற்காப்புக் கலைகள் கற்ற ஒரு பெண். அவர் உடற்பயிற்சிக்கூடத்துக்கு சென்றுவிட்டு அப்போதுதான் வீடு திரும்பிக் கொண்டிருந்திருக்கிறார்.
இந்த நபரோ தான் யாரிடம் வம்பு செய்கிறோம் என்று தெரியாமல் அவரை உரச, தனக்குத் தெரிந்த தற்காப்புக் கலைகளால் அவருக்கு சரியான பாடம் கற்றுக்கொடுத்துவிட்டார் அந்த பெண்.
அவரது கழுத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்ட அந்த பெண், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பேருந்தை நிறுத்தச் சொல்லி, கையோடு அவரை பொலிசாரிடம் ஒப்படைத்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்.
அந்த நபர் செய்த குற்றம் பாலியல் துஷ்பிரயோகம் என நிரூபிக்கப்படும் நிலையில், அவர் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறையில் செலவிட வேண்டியிருக்கும்.
பெண்கள் தற்காப்புக் கலைகள் கற்றுகொள்வது எவ்வளவு நல்லது என்பதை சொல்லாமலே சொல்லிவிட்டார் அந்த இளம்பெண்!