அம்பானி வீட்டு திருமண கொண்டாட்டத்தில் பாடி அசத்திய ரிஹானாவின் மிரளவைக்கும் சொத்து மதிப்பு
ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமண கொண்டாட்டத்தில் கலந்து பாடல் பாடி அசத்தியிருந்தார் பாப் பாடகி ரிஹானா.
9 கிராமி விருதுகள், 12 பில்போர்ட் விருதுகள், 6 கின்னஸ் சாதனைகளை இசை உலகில் படைத்துள்ள ரிஹானா, சர்வதேச அளவில் அதிக வருவாய் ஈட்டி உச்சத்தில் இருக்கிறார்.
பல ஹாலிவுட் நடிகர்களின் சொத்து மதிப்பை விடவும் ரிஹானாவின் சொத்து மதிப்பு பன்மடங்கு அதிகமாக உள்ளது.
இசை கச்சேரி, கான்சர்ட், ஆடை நிறுவனம், விளம்பரங்கள், மாடலிங் என்று பல்வேறு வழிகள் மூலம் ரிஹானாவின் வருவாய் அமைந்துள்ளது.
2010-ம் ஆண்டு முதலே ரிஹானாவின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரிக்க தொடங்கியது.
இவர் வெளியிட்ட Rated R என்ற ஆல்பத்தை விளம்பரம் படுத்த முதல்முறையாக Lat's girl on earth என்ற பயணத்தை மேற்கொண்டார்.
பல்வேறு நாடுகளிலும் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகள் மூலமாக மட்டும் ரூ.331 கோடி வருவாய் ஈட்டினார்.
அதன்பின், ரிஹானா மேற்கொண்ட Loud Tour அவரின் வருவாயை இருமடங்காக உயர்த்தியதால் ரூ.745 கோடி வருவாய் ஈட்டினார்.
அதேபோல் 2013-ம் ஆண்டு டைமண்ட்ஸ் வேர்டு டூர் மூலமாக ரிஹானா மொத்தமாக ரூ.1100 கோடி வருவாய் ஈட்டினார்.
பின்னர் 2014-ம் ஆண்டு பிரபல இசையமைப்பாளர் எமினம் உடன் இணைந்து பங்கேற்ற 6 இசை நிகழ்ச்சிகள் மூலம் இவருக்கு ரூ.298 கோடி ஊதியமாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து 2017-ம் ஆண்டு Fenty Beauty என்ற அழகு சாதன பொருட்களின் விற்பனை தொழிலை தொடங்கிய இவருக்கு 2018-ம் ஆண்டு மட்டும் ரூ.4000 கோடி அளவிற்கு வருமானம் ஈட்டப்பட்டது.
மேலும், X Fenty என்ற ஆடை விற்பனை தொழிலை தொடங்கினார் ரிஹானா. இதன் சந்தை மதிப்பில் மட்டும் ரூ.2,238 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலியில் மட்டும் 152 மில்லியன் Followers-ஐ கொண்டிருக்கும் ரிஹானா இதில் பதிவிடும் ஒவ்வொரு ஸ்பான்ஸர் பதிவிற்கும் ஊதியமாக ரூ. 7 கோடி வழங்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் Spotify உள்ளிட்ட செயலிகளில் ரிஹானாவின் பாடல்களை ஒலி பரப்புவதற்காக ராயல்டியாக மட்டும் கடந்த ஆண்டில் ரூ.80 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாப் பாடகி ரிஹானாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 11,000 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |