சுவிட்சர்லாந்தில் அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு UPSC தேர்வில் தேர்ச்சி பெண் அதிகாரி
சுவிட்சர்லாந்தில் அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு அரசு ஊழியராக வேண்டும் என்ற ஆசையில் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண் இவர் தான்.
யார் அவர்?
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் பிறந்த அம்பிகா ரெய்னா ராணுவக் குடும்பத்தில் வளர்ந்தார். பின்னர், பல்வேறு நகரங்களுக்கு குடிபெயர்ந்தார்.
இவர் அகமதாபாத்தில் உள்ள CEPT பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை பட்டம் பெற்ற பிறகு சுவிட்சர்லாந்தில் பணிபுரிந்தார். அங்கு சூரிச் போன்ற நகரங்களில் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பில் மதிப்புமிக்க அனுபவத்தைப் பெற்றார்.
நிலையான வெளிநாட்டு வாழ்க்கை இருந்தபோதிலும், அம்பிகா சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராக முடிவு செய்தார்.
பின்னர், 2022 ஆம் ஆண்டில் அகில இந்திய அளவில் 164 வது இடத்தைப் பிடித்து UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றார், இது அவரது வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும்.
தற்போது இந்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவையில் (IA&AS) பணிபுரிகிறார் அம்பிகா ரெய்னா. இது இந்திய தலைமை தணிக்கை அதிகாரியின் கீழ் செயல்படுகிறது.
தன்னுடைய பயணம் மற்றும் படிப்பு உத்திகளை சமூக ஊடகங்களிலும் நேர்காணல்களிலும் அடிக்கடி பகிர்ந்து கொண்டுள்ளார் அம்பிகா.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |