சீருடையில் விளம்பரத்தில் நடித்த பெண் காவலர்.., அடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை
சீருடையில் தனியார் பயிற்சி மையத்தின் விளம்பரத்தில் நடித்த பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சீருடையில் விளம்பரம்
இந்திய மாநிலமான மத்திய பிரதசம், ரத்லாம் மாவட்டத்தில் போட்டி தேர்வாளர்களுக்கான தனியார் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த பயிற்சி மையத்தை ஊக்குவித்து பெண் காவலர் ஒருவர் விளம்பரத்தில் நடித்துள்ளார். அவர், தனது சீருடையிலேயே விளம்பரத்தில் நடித்துள்ளார்.
இவர் நடித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இந்நிலையில், இந்த பெண் காவலரை சஸ்பென்ட் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரத்லாம் காவல் கண்காணிப்பாளர் ராகுல் லோதா கூறுகையில், "பெண் காவலர் ஒருவர் தனது சீருடையிலேயே பயிற்சி மையத்தை ஊக்கப்படுத்தி விளம்பரத்தில் நடித்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனால் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |