பொலிஸ் நிலையத்துக்குள் கத்தியுடன் நுழைந்த மர்ம நபர் அராஜகம்... உயிருக்கு போராடும் பெண் பொலிசார்: பிரான்சில் பரபரப்பு
பிரான்சிலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த பெண் பொலிசார் ஒருவரைக் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடியதைத் தொடர்ந்து, அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை Nantes நகருக்கு வடக்கே அமைந்துள்ள La-Chapelle-sur-Erdre என்ற கிராமத்திலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றிற்குள் கத்தியுடன் நுழைந்துள்ளார் ஒருவர். அங்கிருந்த பெண் பொலிசார் ஒருவரை அவர் கத்தியால் குத்தியதில், அந்த பெண் பொலிசார் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது. அந்த நபர் பின்னர் கார் ஒன்றை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.
அவரது கார் ஒரு இடத்தில் மோதியதையடுத்து, காரை விட்டு விட்டு ஓட்டம் பிடித்துள்ளார் அவர். ஆகவே, அப்பகுதியிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பொலிசார், வீடுகளுக்குள் பத்திரமாக இருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இரண்டு ஹெலிகொப்டர்கள், பல மோப்ப நாய்களுடன், 200க்கும் மேற்பட்ட பொலிசார் அந்த நபரை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த தாக்குதலின் நோக்கம் தெரியவில்லை.
ஆனால்,சமீபத்தில்தான் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பொலிசார் பிரான்சில் பேரணிகள் நடத்திய நிலையில், மீண்டும் பொலிசார் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதால் பிரான்சில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
#Nantes ? Commune et secteur #LaChapelleSurErdre (44)
— Gendarmerie nationale (@Gendarmerie) May 28, 2021
➡️ Intervention des forces de l'ordre en cours
⚠️ Évitez le secteur et respectez strictement les consignes des #gendarmes
? RD 39 fermée pic.twitter.com/IhMP8PnQUw