30 ஆண்டுகளில் முதன்முறையாக... பெண் பிரதமர் பெயரை அறிவித்தார் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்
பிரான்ஸ் நாட்டின் அடுத்த பிரதமர் பெயரை அறிவித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.
பிரான்சில் தொழிலாளர் துறை அமைச்சர் பதவியை வகித்துவந்த Elisabeth Borne (61) என்ற பெண்மணியை பிரதமராக தேர்வு செய்துள்ளார் மேக்ரான்.
மேக்ரான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால், தான் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார் முந்தைய பிரதமரான Jean Castex. அவர் சொன்னது போலவே நேற்று அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
அவருடைய இடத்தில் தொழிலாளர் துறை அமைச்சரான Elisabeth Borne பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிகாலை 3.00 மணி வரை தொடர்ந்து வேலை செய்துவிட்டு, மீண்டும் காலை 7.00 மணிக்கு டாண் என அலுவலகத்தில் இருப்பார் என பெயர் பெற்றவரான இந்த Elisabeth Borne, கடந்த 30 ஆண்டுகளில் பிரதமராகும் முதல் பெண் ஆவார்.
இதற்கு முன் Edith Cresson என்ற பெண் 1991, மே 15 முதல், 1992 ஏப்ரல் 2 வரை குறுகிய காலத்துக்கு பிரதமராக பதவி வகித்துள்ளார்.
தனது துறையில் திறம்பட செயல்படுபவர், மென்மையானவர் என பெயர் பெற்ற Elisabeth Borne தொழிலாளர் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டமும், 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டமும் வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.