பெண் சிறைக் காவலரை முத்தமிட்டு ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்ட கைதி!
பிரித்தானியாவில் ஒரு பெண் சிறைக்காவல் அதிகாரி, சிறையில் இருக்கும் குற்றவாளி ஒருவருக்கு முத்தமிடும் ரகசிய காட்சிகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்காட்லாந்தில் சிறைக்காவலர் West Lothian-ல் உள்ள HMP Addiewell சிறையில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.
அந்தச் சிறையில் கெவின் ஹாக் (Kevin Hogg), எனும் குற்றவாளி ஒரு பெண் காவலரை தனது அறையில் வைத்து முத்தமிடுவதை தனது மொபைல் போனில் ரகசியமாக படம்பிடித்துள்ளார்.
குறித்த பெண் காவலர் 29 வயதுக்குட்பட்டவர் என கூறப்படுகிறது. போக்குவரத்து விதிமீறல் குற்றத்திற்காக 3 ஆண்டுகளாக சிறையில் இருந்த கெவின், சிறையில் தடைசெய்யப்பட்டுள்ள செல்போனை பயன்படுத்தி இந்த விடியோவை எடுத்துள்ளார்.
இந்த வீடியோ வெளிச்சத்திற்கு வந்த பிறகு கடந்த வாரம், குறித்த பெண் காவலர் அழுத்தத்தின் காரணமாக தனது வேலையை விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த காட்சிகளை விசாரிக்க சிறை தலைவர்கள் காவல்துறையை அழைத்துள்ளனர். இந்த வீடியோ சில வாரங்களுக்கு முன்பு படமாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
ஏனெனில் வீடியோவில் உள்ள கைதி கெவின் ஹாக் கடந்த மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முதலில் அவர் அந்த பெண் காவலரை பிளாக்மெயில் செய்ய வீடியோவை பகிரந்ததாக கருதப்பட்டது, ஆனால் அவர் தற்பெருமைக்காக இதைச் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.