இந்தியாவின் அடுத்த விண்வெளி பயணம்; ககன்யான் திட்டத்தில் வியோமித்ரா என்ற பெண் ரோபோ
இந்தியாவின் ககன்யான் திட்டத்தில் பெண் ரோபோவை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டத்தில் வியோமித்ரா என்ற பெண் ரோபோவை விண்வெளிக்கு அனுப்பும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சனிக்கிழமை அறிவித்தார்.
'தொற்றுநோய் காரணமாக ககன்யான் திட்டம் தாமதமானது. இப்போது நாங்கள் அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் முதல் சோதனைப் பயணத்தைத் திட்டமிட்டுள்ளோம். விண்வெளி வீரர்களை அனுப்புவதைப் போல அவர்களைத் திரும்பக் கொண்டு வருவது முக்கியம்" என்று ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
ரோபோவானா வயோமித்ரா மனிதனைப் போல நடந்து கொள்ளும் திறன் கொண்டது என்றும் மத்திய அமைச்சர் கூறினார்.
நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் முதலில் கால் பதித்த இடம் இனி 'சிவ சக்தி' என்று அழைக்கப்படும். பெங்களூருவில் உள்ள ISTRAC வளாகத்தில் விஞ்ஞானிகளிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி இதனை அறிவித்தார்.
மனித குலத்தின் நற்குணத்தின் அடையாளம் சிவன். சிவசக்தி என்ற பெயரில் சக்தி என்பது பெண் விஞ்ஞானிகளின் கடின உழைப்பு, உத்வேகம் மற்றும் அதிகாரம் ஆகியவற்றைக் குறிக்கிறது என்று அவர் கூறினார். சந்திரயான் தனது கால்தடங்களை பதித்த சந்திர மேற்பரப்பில் உள்ள இடம் 'திரங்க' என்று அழைக்கப்படுகிறது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். மேலும் ஒவ்வொரு ஆகஸ்ட் 23ம் திகதியும் இனி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்று அவர் கூறினார்.
'சந்திரயான் 3 தரையிறங்கும் போது வெளிநாட்டில் இருந்தபோதும் என் மனது உங்களுடன் இருந்தது. நாட்டை மகத்துவப்படுத்தியுள்ளீர்கள். உலகின் ஒவ்வொரு மூலையிலும் இந்தியா பாராட்டப்படுகிறது. இது ஒரு அசாதாரண சாதனை. இஸ்ரோவில் உள்ள அனைவருக்கும் வணக்கம் செலுத்துகிறேன்’ என மோடி கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
India send female robot to space, Vyommitra, Gaganyaan mission, India’s maiden human space flight mission, female robot Vyommitra, ISRO, Indian Space Research Organisation, Chandrayaan 3 success