நாளை 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.., எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் என்று வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்துள்ளது.
ரெட் அலர்ட் எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று தீவிர புயலாக மாறியது. ஃபெங்கல் புயல் மணிக்கு 7 கி.மீ நகர்ந்த நிலையில் தற்போது 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இந்நிலையில், ஃபெங்கல் புயல் இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்த நிலையில், தற்போது இன்று மாலை கரையைக் கடக்கலாம் என்று கணித்துள்ளது.
இதனால், தமிழக அரசு சார்பில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
அதேபோல, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |