ஃபெங்கல் புயல் நகரும் வேகம் அதிகரிப்பு.., இந்த 4 மாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும்
தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஃபெங்கல் புயல் மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
4 மாவட்டங்கள் என்னென்ன?
தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று தீவிர புயலாக மாறியது. இந்த ஃபெஞ்சல் புயலானது இன்று பிற்பகலில் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது புயல் கரையை கடக்கும் போது 90 கி.மீ வேகத்தில் காற்று சுழன்று வீசுவதுடன், அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், 'ஃபெங்கல்' புயல் தற்போது புதுச்சேரிக்கு கிழக்கே 180 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. ஃபெங்கல் புயல் மணிக்கு 7 கி.மீ நகர்ந்த நிலையில் தற்போது 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இதுதொடர்பாக, சுயாதீன வானிலை அய்வாளர் ஹேமச்சந்திரன் கூறுகையில், "புதுச்சேரிக்கு கிழக்கே 180 கிமீ 'ஃபெங்கல்' புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயலானது நகர்ந்து வந்து இன்று இரவு 7 மணிக்கு சென்னை மற்றும் புதுச்சேரி இடையே மரக்காணம்/மகாபலிபுரத்தை மையமாக வைத்து கரையை கடக்க துவங்கும்.
இதன் காரணமாக 24 மணிநேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக காலை 10 மணிக்கு மேல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தரைக்காற்றின் வேகமும், மழைப்பொழிவும் அதிகட்டிக்கும்.
இதனால், மழையின் தீவிரம் அதிகரிக்கும். அதேபோல, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் படிப்படியாக மழை தொடங்கும்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |