கனடா எல்லை அதிகாரிகளிடம் சிக்கிய 1,500 கிலோகிராம் தடை செய்யப்பட்ட ரசாயனம்: பெரும் அபாயம் தவிர்ப்பு
கனடா எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனை ஒன்றில், 1,500 கிலோகிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட ரசாயனம் ஒன்று சிக்கியுள்ளது.
Fentanyl என்னும் போதைப்பொருளைத் தயாரிக்க பயன்படும் அந்த ரசாயனம், கிரிமினல்கள் கையில் சிக்கியிருந்தால் 2 பில்லியன் டோஸ் போதைப்பொருள் இளைஞர்களின் வாழ்வை சீரழித்திருக்கும்.
கப்பல்களில் வரும் கண்டெய்னர்களை சோதனையிட்டுவந்த அதிகாரிகள், அவற்றில் ஒன்றில், வீட்டு உபயோகப் பொருட்களின் நடுவே 1,500 கிலோகிராம் எடையுள்ள 4-Piperidone என்னும் ரசாயனம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
இதனால், அந்த போதைப்பொருள் கனடாவின் தெருக்களுக்குள் நுழைந்து ஏராளம் இளைஞர்களின் வாழ்வை சீரழிக்க இருந்த பெரும் அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.