கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் வெந்தயம்
வெந்தயம் ஃபேபேசியே (Fabaceae) என்ற குடும்பத்தை சேர்ந்த மூலிகை தாவரமாகும். இது உணவு பொருளாகவும், மருந்து பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இது தமிழ் மக்கள் பயன்படுத்தக்கூடிய உணவுகளில் சுவைப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த வெந்தயத்தின் செடிகள் கீரையாகவும், மற்றும் விதைகள் சுவையூட்டியாகவும் இருக்கின்றன.
வெந்தயத்தில் காணப்படும் சத்துக்கள்!
வெந்தயத்தில் வைட்டமின் எ, வைட்டமின் சி, இரும்புசத்து, வைட்டமின் பி-6, மெக்னீசியம், நார்சத்து, புரதம், பொட்டாசியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது.
வெந்தயத்தில் வைட்டமின் சி சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது, இது சருமத்தின் ஆரோக்கியத்தினை மேம்படுத்துகிறது.
image credit:tamilpithan
உடலின் கெட்ட கொழுப்பை குறைக்குமா வெந்தயம்?
வெந்தய விதைகளின் தூள் இரத்தத்தின் மொத்த கொழுப்பு அளவு மற்றும் எல்டிஎல்-கொழுப்பின் அளவைக் கணிசமாகக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
(Trigonella foenum-graecum) விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் ஸ்டெராய்டல் சபோனின்கள் எனப்படும் சேர்மங்கள் வெந்தயத்தில் உள்ளன. அவை கல்லீரலில் கொலஸ்ட்ரால் உற்பத்தியைத் தடுக்கின்றன மற்றும் கொலஸ்ட்ராலை சரிசெய்கிறது.
வெந்தயத்தினால் குணமாக்கக்கூடிய நோய்கள்!
சிறுநீரக கோளாறுகள், பெரிபெரி எனப்படும் வைட்டமின் குறைபாட்டு நோய், வாய் புண்கள், கொதிப்பு, மூச்சுக்குழாய் அழற்சி, தோலின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள திசுக்களின் தொற்று (செல்லுலிடிஸ்), காசநோய், நாள்பட்ட இருமல், உதடுகளில் வெடிப்பு, வழுக்கை, புற்றுநோய், பார்கின்சன் நோய் என்பவற்றை வெந்தயம் குணப்படுத்தும்.
யாரெல்லாம் வெந்தயம் உண்ணக்கூடாது?
வெந்தயத்தை குழந்தைகள் அதிகம் உட்கொள்ளக்கூடாது. வெந்தயம் உண்பதால் பக்க விளைவுகளாக வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் பிற செரிமான மண்டல அறிகுறிகள் மற்றும் அரிதாக, தலைச்சுற்றல் மற்றும் தலைவலி ஆகியவை அடங்கும்.
அதிக அளவு இரத்த சர்க்கரையில் தீங்கு விளைவிக்கும். வெந்தயம் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.