சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்கள் முற்றிலுமாக வெளியேற வேண்டுமா? இதை சாப்பிட்டால் போதும்
வெந்தயம் உடலுக்கு பல்வேறு மருத்துவ நன்மைகளை செய்யும் ஒரு உணவு பொருளாகும்.
வெந்தயத்திற்கு உடல் எடையை குறைக்கும் சக்தி உண்டு. வெந்தயத்தை சாப்பிட்டால் அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பி நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து உடல் எடையை குறைக்க உதவும்.
சீறுநீரக கற்கள் காரணமாக அதிக வலி ஏற்படும்போது வெந்தயத்தை சாப்பிட்டால் சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்கள் முற்றிலுமாக வெளியேற்றப்படும். இதன் மூலம் சிறுநீரகம் பலமாகும்.
சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து 24 வாரங்கள் முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலம் இன்சுலின் உற்பத்தியை துரிதப்படுத்துகிறது.
வெந்தய தோசையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் கல் இருக்காது.
வெந்தயத்தில் கரையும் நார்ச்சத்து இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.