மன்னருடைய முடிசூட்டுவிழாவிற்கு அழைக்கப்படாத சிறுவயது தோழி: என்ன காரணம்
பிரித்தானிய மன்னர் சார்லசுடைய தம்பியான இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவி சாரா ஃபெர்குசன்.
மன்னருடைய முடிசூட்டுவிழா அடுத்த மாதம், அதாவது, மே மாதம் 6ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், அதில் 2,000 விருந்தினர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
ஆனால், சார்லசுடைய சிறுவயது தோழியாக இருந்தும், சாரா முடிசூட்டுவிழாவிற்கு அழைக்கப்படவில்லை.
காரணத்தை போட்டு உடைத்தார்
இந்த விடயம் ஊடகங்களில் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்ட நிலையில், மன்னருடைய முடிசூட்டுவிழாவிற்கு தான் அழைக்கப்படாதது குறித்து, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சாரா, வெளிப்படையாக பேசியுள்ளார்.
மன்னருடைய முடிசூட்டுவிழா என்பது ஒரு தேசிய நிகழ்வாகும். நானோ இளவரசரிடமிருந்து விவாகரத்து பெற்றவள்.
நான் சார்லஸ் மற்றும் கமீலாவுடன் நெருக்கமானவள். இப்போதைக்கு, குடும்பம் ஒற்றுமையாக இருப்பதுதான் முக்கியம்.
தனிப்பட்ட முறையில் நான் முடிசூட்டுவிழாவில் கலந்துகொள்ளலாம். குடும்பத்தில் ஒரு உறுப்பினராக இருப்பது பெருமைக்குரிய ஒரு உணர்வாகும் என்கிறார் சாரா.