லண்டன் பெண் ஒருவரை எப்ஸ்டீனிடம் சிக்க வைத்த ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவி
ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவி சாரா பெர்குசன் தனது நெருங்கிய வட்டத்தில் உள்ள பெண் ஒருவரை ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது, வெளியான மின்னஞ்சல்களில் இருந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மன்ஹாட்டன் வீட்டில்
வெளியான எப்ஸ்டீன் கோப்புகளில், 22 வயதான Poppy Cotterell என்பவரை ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவி பெர்குசன் எப்ஸ்டீனுக்கு அறிமுகம் செய்துள்ளதும், அவர் தொடர்பிலான தகவல்களை இவர் அவருக்கு பகிர்ந்ததும் அம்பலமாகியுள்ளது.

பெர்குசனும் பாப்பியின் மறைந்த தாயார் கரோலினும் நெருக்கமான நட்பு வட்டத்தில் இருந்தவர்கள் என்றே கூறப்படுகிறது. நவம்பர் 2010 இல் பாப்பியின் தொடர்பு விவரங்களை பெர்குசன் எப்ஸ்டீனுக்கு அனுப்பியுள்ளார்.
புளோரிடா சிறையில் இருந்து எப்ஸ்டீன் விடுவிக்கப்பட்ட 16 மாதங்களுக்குப் பிறகு இச்சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து பாப்பி எப்ஸ்டீனை அவரது மன்ஹாட்டன் வீட்டில் சந்தித்தார், அதன் பிறகு பாப்பியை வேலைக்கு அமர்த்துவது குறித்து எப்ஸ்டீன் பரிசீலித்ததாகத் தெரிகிறது.
மட்டுமின்றி, அவரது நண்பரான டாக்டர் உட்சன் மெர்ரெல் நடத்தும் சிறார்கள் சுகாதார தொண்டு நிறுவனத்திற்கு பாப்பியின் பெயரில் சுமார் 73,000 பவுண்டுகள் நன்கொடையும் எப்ஸ்டீன் அளித்துள்ளார்.
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்?
சில நாட்களுக்குப் பின்னர் எப்ஸ்டீனின் உதவியாளர் ஒருவர் டாக்டர் மெர்ரெலுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், அவரது குழந்தைகளுக்கான மாற்று மருத்துவ தொண்டு நிறுவனத்தைப் பற்றி மேலும் அறிய பாப்பி விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் டாக்டர் மெர்ரெலின் அலுவலகத்தில் பாப்பியையும் கரிண்டாவையும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அந்த உதவியாளர் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

ஏற்க மறுத்துவிட்டேன்
தற்போது 38 வயதாகும் பாப்பி லண்டனில் ஒரு தனியார் மனநல மருத்துவராகவும் யோகா ஆசிரியராகவும் பணிபுரிகிறார். எப்ஸ்டீன் விவகாரம் தொடர்பில் சன் பத்திரிகை பாப்பியை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டத்தில், அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டு, 22 வயதில், நியூயார்க்கில் ஒரு கலைக்கூடத்தில் பயிற்சியாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, எப்ஸ்டீனின் கலைத் தொகுப்பைக் கவனிக்கும் ஒரு சாத்தியமான வேலை குறித்து எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது என குறிப்பிட்ட பாப்பி,

எப்ஸ்டீனை சந்தித்த பிறகு அவர் தமக்கு ஒரு வேலையை வழங்கினார், அதை தான் ஏற்க மறுத்துவிட்டேன். அதன் பிறகு அவரை மீண்டும் ஒருபோதும் சந்திக்கவில்லை என்றும் பாப்பி விளக்கமளித்துள்ளார்.
எப்ஸ்டீனைச் சந்திப்பதற்கு முன்பு, டாக்டர் உட்சன் மெர்ரெலின் தொண்டு நிறுவனம் தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை என்றும், அந்த நிறுவனத்திற்கு நன்கொடை அளிக்குமாறு எப்ஸ்டீனை தாம் கோரவில்லை, மேலும் எப்போதாவது நன்கொடை அளிக்கப்பட்டதா என்பதும் தனக்குத் தெரியாது எனவும் பாப்பி தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |