109 ஓட்டங்கள் இலக்கை எட்ட முடியாமல் சுருண்ட இலங்கை: ஹாட்ரிக் எடுத்த நியூசிலாந்து வீரர் கூறிய விடயம்
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹசரங்கா 4 விக்கெட்
தம்புள்ளையில் நடந்த டி20 போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின.
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி ஹசரங்கா, பத்திரனா மிரட்டலான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 108 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக வில் யங் 30 (32) ஓட்டங்களும், ஜோஷ் கிளர்க்சன் 24 (25) ஓட்டங்களும் எடுத்தனர். வணிந்து ஹசரங்கா (Wanindu Hasaranga) 4 விக்கெட்டுகளும், மதீஷா பத்திரனா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
ஹாட்ரிக் விக்கெட்
பின்னர் களமிறங்கிய இலங்கை அணிக்கு லோக்கி பெர்குசன் (Lockie Ferguson) ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார்.
ஒருபுறம் விக்கெட்கள் சரிய பதும் நிசங்கா (Pathum Nissanka) அரைசதம் அடித்தார். ஆனாலும், பிலிப்ஸ் வீசிய கடைசி ஓவரில் நிசங்கா (52), பத்திரனா மற்றும் தீக்ஷணா ஆட்டமிழக்க, இலங்கை அணி 103 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்மூலம் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. பெர்குசன், பிலிப்ஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
மிகவும் கடினமானது
பின்னர் ஆட்டநாயகன் விருது பெற்ற பெர்குசன் கூறுகையில், "எனது ஹாட்ரிக் இரண்டு ஓவர்களில் பிரிக்கப்பட்டதால் அந்த உற்சாகமாக இல்லை. 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பித்துபிடித்து போன்றது.
வெளிநாட்டில் வெற்றி பெறுவது, குறிப்பாக உலகத்தின் இந்த பகுதியில் மிகவும் கடினமானது. ஏனென்றால் நாங்கள் நியூசிலாந்தில் பழகியதை விட நிலைமைகள் மிகவும் வேறுபட்டவை. உண்மையில் ஆரம்பத்தில் அவர்கள் (இலங்கை வீரர்கள்) சண்டையில் இறங்கி மிகவும் கடினமாக போட்டியிட்டனர்" என தெரிவித்தார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |