எப்ஸ்டீனிடம் திருமணக் கோரிக்கை வைத்த பிரித்தானிய இளவரசி பீட்ரைசின் தாயார்
சமீபத்தில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்திவரும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில், பிரித்தானிய இளவரசி பீட்ரைசின் தாயார் சாரா பெர்குசனின் திருமணக் கோரிக்கையும் இடம்பெற்றுள்ளது.
உங்கள் சேவைக்காக
ஜெஃப்ரி எப்ஸ்டீனிடம் சாரா பெர்குசன் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கோரியுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

கடந்த 2019 ஆகஸ்டு மாதம் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காகக் காத்திருந்தபோது, நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள ஒரு ஃபெடரல் சிறையில் இருந்து ஜெஃப்ரி எப்ஸ்டீன் சடகமாக மீட்கப்பட்டார்.
இந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அமெரிக்க நீதித்துறை எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் கட்டம் கட்டமாக வெளியிட்டு வருகிறது.
சமீபத்தில் வெளியான ஆவணங்களில், சாரா பெர்குசன் எப்ஸ்டீனுக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றில், உங்கள் சேவைக்காக காத்திருக்கிறேன், என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள் என கோரியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இரு மகள்களுடன்
2009ல் எப்ஸ்டீன் சிறையில் இருந்து வெளியான சில மாதங்களுக்குப் பிறகு சாரா பெர்குசன் திருமணக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மட்டுமின்றி, பீட்ரைஸ் மற்றும் யூஜெனி என தமது இரு மகள்களுடன் ரகசியமாக மியாமியில் எப்ஸ்டீனை சாரா சந்தித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் வெளியான எப்ஸ்டீன் ஆவணத்தில்,

சாரா ஃபெர்குசனின் முன்னாள் கணவரும் மன்னர் சார்லஸின் சகோதரருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் பெண் ஒருவருடன் காணப்படும் புகைப்படம் ஒன்றும் வெளியானது. ஆனால், எப்ஸ்டீன் தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஆண்ட்ரூ மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |