கனேடிய மாகாணமொன்றில் புலம்பெயர்ந்தோர் மீது இனவெறித் தாக்குதல்: இருவர் காயம்
கனேடிய மாகாணம் ஒன்றில் புலம்பெயர்ந்தோர் இருவர் தாக்கப்பட்டார்கள்.
அது இனவெறித்தாக்குதல் என கருதப்படுவதால் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.
கனடாவில் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் நிகழ்ச்சி ஒன்றின்போது புலம்பெயர்ந்தோர் இருவர் தாக்கப்பட்ட விடயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று 1.30 மணியளவில் பிரின்ஸ் எட்வர்ட் தீவிலுள்ள Évangéline Recreation Centre என்ற இடத்துக்கு பொலிசார் அழைக்கப்பட்டார்கள்.
அங்கு புலம்பெயர்ந்தோர் இருவர் தாக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் இருவரும் காயமடைந்ததையடுத்து மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள்.
புலம்பெயர்ந்தோர் நம்பிக்கையுடன் வாழ்ந்துவரும் அந்த பகுதியில் இனவெறுப்புத் தாக்குதல் நடந்த விடயம் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தாக்குதல் இங்கு வாழ்வோரின் இதயத்தை பிரதிபலிப்பதில்லை, இங்குள்ளவர்கள் இனவெறுப்புக்கு எதிரானவர்கள் என புலம்பெயர்தல் ஆதரவு அமைப்பு ஒன்றின் தலைவரான Yvonne Gallant என்பவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அந்த தாக்குதலைக் கண்ணால் பார்த்தவர்கள் சாட்சியமளிக்க முன்வருமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.