Festival Sale: அமேசான், ஃப்ளிப்கார்டின் அதிரடி ஆஃபர்!
ஒன்லைன் வர்த்தக தளமான அமேசான், ஃப்ளிப்கார்டில் ஒன்லைன் ஷாப்பிங்கை மக்கள் ஈர்க்கும் வகையில் பல சிறந்த சலுகைகளை வழங்கி வருகிறது.
ஃபெஸ்டிவல் சேல் (Festival Sale)
வாடிக்கையாளர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அமேசானின் கிரேட் ஃபெஸ்டிவல் சேல் மற்றும் ஃபிளிப்கார்டின் பிக் சேவிங் டேயில் பல சலுகைகள், ஆஃபர்கள், கேஷ்பேக், தள்ளிப்படி போன்றவை வழங்கப்படும்.
இதை தவிர்த்து, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டை பயன்படுத்தியும் பணத்தை நாம் சேமிக்கலாம். இந்த தொகுப்பில் நாம் கிரெடிட் கார்டை எப்படி, திட்டமிட்டு பயன்படுத்தி பணத்தை சேமிக்கலாம் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம்.
பல ஒன்லைன் வர்த்தக தளங்களில் சில பொருள்களுக்கு கேஷ்பேக் ஆஃபர்கள் வழங்கப்படும். அதனால், முதலில் நாம் ஷாப்பிங்கை தொடங்குவதற்கு முன்பு எந்த பொருளுக்கு கேஷ்பேக் வழங்கப்படுகிறது என்பதை செக் செய்ய வேண்டும்.
இந்த ஃபெஸ்டிவல் சீஸனின் பல தளங்கள் பல வங்கிகளுடன் இணைந்து சலுகைகளை வழங்குவார்கள்.
அதனால் உங்களிடம் அதிக கிரெடிட் கார்டு இருந்தால், எந்த கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் குறைந்த விலையில் வாங்கலாம் என்ற திட்டமிட்டு வாங்குங்கள்.
முக்கியமாக, உங்களின் கிரெட்டி கார்டின் வெகுமதி புள்ளிகளை வைத்து கேஷ்பேக் பெறலாம் அல்லது பாதிக் கட்டணங்களை செலுத்தலாம். இதனால், ஃபெஸ்டிவல் சேலின் போது பணத்தை மிச்சப்படுத்தலாம்.
கிரெடிட் கார்டுகள்
முக்கியமாக, பல கிரெடிட் கார்டுகள் வட்டியில்லா கடன்களை வழங்குகின்றன. இதனால், நாம் இந்த ஃபெஸ்டிவல் சீசனில் கிரெடிட் கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், கூடுதல் கட்டணமின்றி தவணை முறையில் பொருள்களையும் வாங்கிக் கொள்ளலாம்.
குறிப்பாக நீங்கள் அதிக வெகுமதி புள்ளிகள் கொண்ட கிரெடிட் கார்டை பயன்படுத்துங்கள். மேலும், இந்த சீஸனின் நீங்கள் அதிக பொருள்களை வாங்கினால் அதிக வெகுமதி புள்ளிகள் உங்களுக்கு கிடைக்கும். இது உங்களது எதிர்காலத்திற்கு பயன்படும் வகையில் இருக்கும்.
மேலும், நீங்கள் உங்கள் ஷாப்பிங்கை தொடங்குவதற்கு முன்பு, கிரெடிட் கார்டுகளுக்கு செலுத்த வேண்டிய தவணைகளை செலுத்திக் கொள்ளுங்கள். இந்த ஃபெஸ்டிவல் சீசனில் நீங்கள் அதிக போனஸ் தரும் கிரெடிட் கார்டு வாங்கினால் உங்களுக்கு நல்ல பலன்களை தரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |