லூவ்ரே அருங்காட்சியக நகை திருட்டை வைத்து நகைச்சுவையாக விளம்பரம் செய்த Fevicol
பிரான்ஸின் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் நடந்த நகை திருட்டு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் பிரபல பசை நிறுவனமான ஃபெவிகால் (Fevicol), தனது புதிய விளம்பரத்தை வெளியிட்டு இணையத்தில் வைரலாக்கியுள்ளது.
“Ab Dhoom machane ki baari hamari” என்ற வசனத்துடன் வெளியான இந்த விளம்பரம், “This mission is impossible” என நகைச்சுவை பாணியில் கூறுகிறது.
இந்த விளம்பரத்தில், திருடப்பட்ட நகைகள் ஃபெவிகால் மூலம் உறுதியான முறையில் ஒட்டப்பட்டிருப்பதை காட்டுகிறது.
இதன் மூலம், “ஃபெவிகால் ஒட்டியிருந்தால் திருட முடியாது” என்ற கருத்தை நகைச்சுவையாக வெளிப்படுத்துகிறது.

இந்த விளம்பரம் ஃபெவிகால் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ Instagram பக்கத்தில் October 22, 2025 அன்று பகிரப்பட்டு, 25,000-க்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் பல பாராட்டுக்களை பெற்றுள்ளது.
Instagram பயனர்கள் இந்த விளம்பரத்தை பாராட்டி, “உங்கள் குழுவுக்கு ஊதியம் உயர்த்த வேண்டும்”, “இதுவரை பார்த்த சிறந்த விளம்பரம்”, “ஃபெவிகால் சற்று அமைதியாக இருக்க வேண்டும்” போன்ற கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
ஃபெவிகால் நிறுவனத்தின் விளம்பரங்கள் எப்போதும் நகைச்சுவை, சாமான்ய வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் புத்திசாலித்தனமான கதை சொல்லல் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்து வருகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Fevicol Louvre heist ad, Fevicol viral Instagram ad, Louvre jewellery theft 2025, Fevicol Dhoom ad campaign, Mission Impossible Fevicol ad, Empress Marie Louise necklace, Fevicol glue advertisement, Louvre museum robbery parody, Fevicol creative marketing, Indian brand viral ad 2025