செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்களை கண்டுபிடிப்பது எப்படி?
கோடை காலத்தில் மாம்பழத்தை ருசிக்காதவர்கள் இருக்க முடியாது, அதன் சுவையை நினைத்தாலே பலருக்கும் நாவில் எச்சில் ஊறும்.
பலரும் சந்தைக்கு சென்று மாம்பழத்தை வாங்குவார்கள், அதில் இயற்கையாகவே பழுத்ததா அல்லது செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டதா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்.
ஏனெனில் பழுத்த மாம்பழத்தில் எவ்வளவு இரசாயனங்கள் கலக்கப்படுகிறது என்று தெரியுமா?
ஆம். கடைகளில் விற்கப்படும் மாம்பழத்தை சீக்கிரமாக பழுக்க வைப்பதற்காக குறிப்பிட்ட ஒரு இரசாயனத்தை பயன்படுத்துகின்றனர். அதை எப்படி கண்டறிவது மற்றும் அதனால் உடல் ரீதியாக எவ்வாறான தீமைகள் ஏற்படும் என்று தெரிந்துக்கொள்வோம்.
கண்டறிவது எப்படி?
மாம்பழம் வாங்கியதும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரைத்து அதில் போட வேண்டும்.
பழுத்த பழமாக இருந்தால் தண்ணீரில் மூழ்கி அடியில் போகும். அதற்கு மாறாக மேலேயே மிதந்தால் அது செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட பழமாகும்.
செயற்கையாக பழுக்கவைக்கப்பட்டிருந்தால் மாம்பழங்களின் தோல்களின் சில இடங்களில் பச்சை நிறம் தென்படும்.
பழத்தை வெட்டும்பொழுது உட்பகுதியானது வெளிர் மஞ்சள் அல்லது அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது செயற்கையாக பழுக்கவைக்கபட்ட பழமாகும்.
செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உண்ணும்போது வாயில் அல்லது உதட்டில் எரிச்சல் ஏற்படும்.
உடல் ரீதியாக ஏற்படக்கூடிய தீமைகள்
-
வயிற்றுப்போக்கு
-
வயிற்று வலி
- ஹைப்போ தைராய்டு
- நீரிழிவு நோய்
- கருப்பைப் பிரச்சினை
- புற்றுநோய்
குறிப்பு:- குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் முக்கியமாக மாம்பழத்தை சாப்பிட்டு பால் கொடுக்ககூடாது. அவ்வாறு கொடுத்தால் அது குழந்தையின் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.