FIFA மற்றும் T20 உலகக் கோப்பை பரிசுத்தொகையில் இவ்வளவு வித்தியாசமா? சுவாரஸ்யமான நிதி ஒப்பீடு
உலகின் முன்னணி விளையாட்டு போட்டிகளான கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டியின் நிதி ஒப்பீடு குறித்து சுவாரஸ்யமான தகவல் இதோ.
தொடங்கியது கால்பந்து திருவிழா
2026ம் ஆண்டிற்கான FIFA உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் உள்ள 16 மைதானங்களில் 48 அணிகள் மோதும் 104 போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் நடப்பு FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான நிதி ஒதுக்கீடு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
FIFA உலகக்கோப்பை கால்பந்து நிதி விவரங்கள் மற்றும் பரிசு தொகை
2026ம் ஆண்டுக்கான FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக மட்டும் FIFA அமைப்பு கிட்டத்தட்ட 727 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியாக ஒதுக்கியுள்ளது.
இதில் 655 மில்லியன் அமெரிக்க டொலர்கள் போட்டியில் கலந்து கொள்ளும் 48 அணிகளுக்கான பரிசுத் தொகையாக மட்டும் வழங்கப்பட உள்ளது.
இது கடந்த ஆண்டை விடவும் கிட்டத்தட்ட 50% கூடுதல் நிதியாகும்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் பணியின் பரிசு தொகை விவரம்:
சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 50 மில்லியன்.
இரண்டாம் இடம் வெல்லும் அணிக்கு 33 மில்லியன்.
மூன்றாம் இடம் வெல்லும் அணிக்கு 29 மில்லியன்.
நான்காம் இடம் வெல்லும் அணிக்கு 27 மில்லியன்.
டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையின் நிதி விவரங்கள் மற்றும் பரிசு தொகை
2026 ஆடவர் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் மொத்த பரிசுத் தொகையாக ICC-ஐ ஒதுக்கிய நிதி 11.25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே.
இதில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு 2,639,423 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டது.

இரண்டாம் இடம் வென்ற நியூசிலாந்து அணிக்கு 1,422,692 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டது.
மூன்றாம் இடம் வென்ற தென்னாப்பிரிக்க அணிக்கு 1,005,577 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டது.
கிரிக்கெட் மற்றும் கால்பந்து ஆகிய இரண்டு விளையாட்டுகளும் அதன் உயர்ந்த நிலையை பெற்று இருந்தாலும், பிஃபா ஒளிபரப்பு உரிமம், ஸ்பான்சர்கள், டிக்கெட்கள் விற்பனை, ஆகியவை மூலம் கிடைக்கக்கூடிய வருவாயின் அளவு கூடுதல் என்பதால் கால்பந்து உலகக் கோப்பையின் பரிசுத் தொகை மிகப்பெரிய உச்சத்தில் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |