தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ஜியானி இன்ஃபான்டினோ: அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய FIFA
Gianni Infantino will run for re-election FIFA Confirms: அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் ஜியானி இன்ஃபான்டினோ போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
சர்ச்சையில் சிக்கிய பிஃபா தலைவர்
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரின் டிக்கெட் விற்பனை தொடர்பில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது.
இந்த சர்ச்சையை தொடர்ந்து பிஃபா தலைவர் நேரடியாக எந்தவொரு ஊடகங்களையும் சந்திக்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் சனிக்கிழமை போலந்து நாட்டின் கட்டோவிஸ்(Katowice) நகரில் நடைபெறும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை போட்டியின் தொடக்க விழாவிற்கு வருகை தந்த பிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ (Gianni Infantino) வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பிஃபாவில் அவரது எதிர்காலம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, கால்பந்து விளையாட்டை வளர்ப்பதும், உலகளவிலான கால்பந்து தொடர்களை மேம்படுத்துவது தான் தன்னுடைய எதிர்காலம் என்று பதிலளித்தார்.
மேலும் டிக்கெட் விற்பனை சர்ச்சை தொடர்பாக நேரடியாக பதிலளிக்க தவிர்த்த இன்ஃபான்டினோ, “ இன்று இதற்கான நேரம் அல்ல” என்றும் “உரிய நேரத்தில் பல விஷயங்களை சொல்வதற்கு இருக்கும் என்று தெரிவித்தார்.

பிஃபா வெளியிட்ட அறிவிப்பு
இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் பிஃபா தேர்தலில் ஜியானி இன்ஃபான்டினோ மீண்டும் போட்டியிடுவார் என்பதை பிஃபா(FIFA) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
அவரது நீண்ட பதவி காலம் குறித்து பல கேள்விகள் எழுந்து வந்த நிலையில் இந்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |