உலக கோப்பை கால்பந்தில் நடுவரிடம் அத்துமீறிய உருகுவே வீரர்: 15 போட்டிகளில் விளையாட FIFA தடை
கத்தார் கால்பந்து உலக கோப்பையில் நடுவர் டேனியல் சீபர்ட்டுடன் சண்டையிட்டு கோபத்தில் முழக்கமிட்டதை அடுத்து உருகுவே வீரர் ஜோஸ் கிமினெஸ் 15 கால்பந்து போட்டிகளில் விளையாடுவதற்கான தடையை எதிர்கொள்கிறார்.
வெளியேறிய உருகுவே
தென் அமெரிக்க நாடான உருகுவே அணிக்கு கால்பந்து உலக கோப்பையில் சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேற கானா அணியுடனான வெற்றி முக்கியமானதாக கருதப்பட்ட நிலையில், இந்த போட்டியில் உருகுவே அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
Qatar Fifa Football World Cup-2022
இருப்பினும் குழுவில் உள்ள முன்னணி போர்ச்சுகல் அணி தென் கொரிய அணியுடன் தோல்வியடைந்ததை தொடர்ந்து, உருகுவே புள்ளிகள் கணக்கில் உலக கோப்பை கால்பந்து தொடரில் இருந்து வெளியேற நேர்ந்தது.
மறுக்கப்பட்ட பெனால்டி
கானா-உருகுவே அணிகளுக்கு எதிரான போட்டிகளில் எடின்சன் கவானியின் மேல்முறையீட்டை நடுவர் டேனியல் சீபர்ட் மறுத்து பெனால்டி வாய்ப்பையும் மறுத்தார்.
இந்த போட்டியில் உருகுவே அணி வெற்றி பெற்று இருந்தாலும், சிறிய புள்ளிகள் வித்தியாசத்தில் தென் கொரிய அணி சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேறியது, உருகுவே அணி கால்பந்து தொடரில் இருந்து வெளியேறியது.
AFP via Getty Images
தங்கள் அணி வெளியேறியது என்பதை உணர்ந்த உருகுவே-வின் பல வீரர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.
உருகுவே வீரர் ஜோஸ் கிமினெஸ் நடுவர் டேனியல் சீபர்ட்டுடன் சண்டையிட்டு கோபத்தில் அவரிடம் முழக்கமிட்டு துரத்தி சென்றார்.
இந்த காட்சிகள் அங்குள்ள கேமராக்களில் பதிவாகி இருந்தது, அத்துடன் அதில் “அவர்கள் [நடுவர்கள்] அனைவரும் திருடர்கள் கூட்டம்,” என்ற முழக்கமிட்டது தெளிவாக தெரிந்தது.
Jose Gimenez & referee Daniel Siebert- ஜோஸ் கிமினெஸ் & நடுவர் டேனியல் சீபர்ட்
15 போட்டிகளில் விளையாட தடை
இந்த சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள ஃபிஃபா கால்பந்து அமைப்பு, உருகுவே “கால்பந்தாட்டத்தை இழிவுபடுத்தும் நடத்தையை செய்துள்ளது" என தங்களது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது.
அத்துடன் கால்பந்து உலக கோப்பையில் நடுவர் டேனியல் சீபர்ட்டுடன் சண்டையிட்டு கோபத்தில் முழக்கமிட்ட உருகுவே வீரர் ஜோஸ் கிமினெஸ் 15 கால்பந்து போட்டிகளில் விளையாடுவதற்கான தடையை எதிர்கொள்கிறார் என்று தெரிவித்துள்ளது.
Jose Gimenez-ஜோஸ் கிமினெஸ்
உருகுவே கூட்டமைப்பு மற்றும் வீரர், ஃபிஃபா கால்பந்து அமைப்பின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க பத்து நாட்கள் வரை வழங்கப்பட்டுள்ளது.