உலகக் கோப்பை நடுவர் செய்த சைகை., FIFA-விற்கு இனவெறி கண்காணிப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை
2026 உலகக் கோப்பையில், ஜேர்மனி vs குராசோ போட்டிக்கு முன் ஒளிபரப்பில் அவுஸ்திரேலிய நடுவர் (VAR அதிகாரி) Shaun Evans, “OK” கைசைகையை காட்டியதால் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த சைகை, 2019-இல் Anti-Defamation League (ADL) அமைப்பால் “வெள்ளை இன ஆதிக்க சின்னம்” என வகைப்படுத்தப்பட்டது.
இதனால், FIFA-வின் நீண்டகால கூட்டாளியான Fare Network அமைப்பு, “இந்த அதிகாரி இனி உலகக் கோப்பையில் பங்கு பெறக்கூடாது” எனக் கோரிக்கை விடுத்துள்ளது.

Fare Network, “இது ‘நியோ-நாசி’ சின்னமாகப் பயன்படுத்தப்படுகிறது. உலகளாவிய இனவெறி வலதுசாரி வட்டாரங்களில் பரவலாக காணப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், சிலர் இதை “circle game” எனப்படும் குழந்தைகளின் விளையாட்டு சைகையாகக் கருதுகின்றனர்.
Evans, உலகக் கோப்பையில் VAR குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 அதிகாரிகளில் ஒருவராக உள்ளார். FIFA மற்றும் அவுஸ்திரேலிய கால்பந்து நிர்வாகம் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |