எங்கப்பா அந்த மெஸ்ஸி? அன்று கேலி செய்த சவுதி ரசிகர் இப்போது.., நிலைமையை புரட்டிப்போட்ட அர்ஜென்டினா!
குரூப் ஸ்டேஜ் போட்டியில் தோல்வியுற்றதால் லியோனல் மெஸ்ஸியை கேலி செய்த சவுதி அரேபிய ரசிகர் இப்போது அர்ஜென்டினா ஜெர்சியை அணிந்து ஆதரவளித்துவருகிறார்.
அதிர்ச்சியூட்டும் நிகழ்வு
நவரம்பர் 22-ஆம் திகதி நடந்த குரூப் ஸ்டேஜ் போட்டியில், சவுதி அரேபிய அணிக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி தோல்வியுற்றது. சவுதி அரேபிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
FIFA உலகக் கோப்பை 2022 போட்டி வரலாற்றில் இது மிகவும் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளில் ஒன்றாக மாறியது. இதனை சவுதி அரேபிய ஆதரவாளர்களின் வெறித்தனமாக கொண்டாடினர்.
அர்ஜென்டினா அணிக்கு எதிராக சவுதி அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், ஆட்டத்திற்கு மறுநாள் நாட்டில் கொண்டாட்ட விடுமுறையை சவுதி மன்னர் அரேபியா சல்மான் அறிவித்தர்.
@pubity/Instagram, Getty
மெஸ்ஸியை கேலி செய்த சவுதி அரேபிய ரசிகர்
இந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியில், அப்போது, சவுதி அரேபிய ரசிகர் ஒருவர் நேரலையில் இருந்த ஒரு நிருபரை குறுக்கிட்டு, “என்னை மன்னியுங்கள், மெஸ்ஸி எங்கே., மெஸ்ஸி எங்கே., மெஸ்ஸி எங்கே?” என்று கேட்கும் வீடியோ இணையத்தில் பயங்கரமாக வைரலானது. அந்த வீடியோவில், மெஸ்ஸியை தனது சட்டைப் பையில், நிருபரின் பாக்கெட்டுகளில் தேடுவது போல் கேலி செய்தார்.
These Saudi Arabia fans ?pic.twitter.com/wzTZMjsduC
— Troll Football (@TrollFootball) November 23, 2022
நிலைமையை புரட்டிப்போட்ட மாயாஜால மெஸ்ஸி
ஆனால், காலம் மாறியது, யாரும் எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்தன. லியோனல் மெஸ்ஸி மீண்டும் ஒரு முறை உயர்ந்து ஐந்து கோல்களை அடித்தார் மற்றும் அர்ஜென்டினாவை மற்றொரு இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை கத்தார் 2022 FIFA உலகக்கோப்பையின் இறுதி போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா பிரான்ஸை எதிர்கொள்கிறது.
அதேபோல், போலந்து மற்றும் மெக்சிகோவை வீழ்த்த முடியாமல் உலகக் கோப்பையில் இருந்து சவுதி அரேபியா வெளியேறியது.
இப்போது அர்ஜென்டினாவை ஆதரிக்கும் அதே ரசிகர்!
மெஸ்ஸியை கேலி செய்ததற்காக வைரலாகிய அந்த ரசிகரின் மனதில் கடுமையான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதே ரசிகர் இப்போது அர்ஜென்டினா ஜெர்சியை அணிந்துகொண்டு மெஸ்ஸிக்கு ஆதரவாகக் காணப்படுகிறார்.
அந்த நபர் இப்போது , “நண்பர்களே, நாங்கள் அனைவரும் மெஸ்ஸியை ஆதரிக்கிறோம், நேசிக்கிறோம், அவர் கோப்பையை வெல்வதை பார்க்க விரும்புகிறோம்!" என்று கூறியுள்ளார்.
சாதனை மன்னன் மெஸ்ஸி
SkySports
கத்தாரில் நடந்த உலகக் கோப்பையில் பல சாதனைகளை முறியடித்தவர் மெஸ்ஸி. 35 வயதான அவர் இப்போது உலகக் கோப்பையில் 11 கோல்களை அடித்துள்ளார், இது ஒரு அர்ஜென்டினா வீரர், கேப்ரியல் பாடிஸ்டுடாவின் சாதனையை முறியடித்தது.
குரோஷியாவுக்கு எதிரான அரையிறுதியில் 25-வது ஆட்டத்தில் பங்கேற்றதன் மூலம் உலகக் கோப்பையில் அதிக எண்ணிக்கையில் விளையாடிய சாதனையையும் சமன் செய்தார்.
ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸுக்கு எதிரான அணியின் இறுதிப் போட்டியில் அவர் இந்த சாதனையைப் படைத்தார்.
இறுதிப்போட்டியில் மேலும் பல சாதனைகளை படைக்க காத்திருக்கிறார்.