FIFA மகளிர் உலகக் கோப்பை 2023: முதல் பாதியிலேயே 3 கோல் எடுத்து ஸ்பெயின் வெற்றி
ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் கோஸ்டாரிகாவை 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வென்றது.
எதிரணி வீராங்கனையின் கவனக்குறைவால் முதல் கோல்
ஆரம்பத்திலேயே ஸ்பெயின் ஆட்டத்தை கைப்பற்றியது. ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் எஸ்தர் கோன்சலஸ் (Esther Gonzalez) அடித்த பந்து கோஸ்டாரிகா வீராங்கனை Valeria Del Campo-ன் கவனக்குறைவால் ஸ்பெயின் அணிக்கான முதல் கோலாக மாறியது.
அதையடுத்து 23-வது நிமிடத்தில் ஐதானா பொன்மதி (Aitana Bonmati) திறமையாக செயல்படுத்தப்பட்ட ஃபினிஷிங் மூலம் அட்டகாசமான கோலை அடித்தார்.
அதையடுத்து, அடுத்த நான்கு நிமிடங்களுக்குப் பிறகு (27-வது நிமிடத்தில்), எஸ்தர் கோன்சலஸ் அணிக்கான மொன்ரவது கோலை அடித்தார்.
முதல் பாதியிலேயே 3 கோல் எடுத்த ஸ்பெயின்
ஆட்டத்தின் முதல் பாதியிலேயே வெற்றிக்கான மூன்று கோல்களையும் ஸ்பெயின் அணி எடுத்தது. கோஸ்டாரிகா ஒரு கோல் கூட எடுக்கவில்லை.
ஸ்பெயினின் இடைவிடாத அழுத்தம் இடைவேளைக்குப் பிறகும் தொடர்ந்தது, ஓல்கா கார்மோனா இரண்டாவது பாதியில் வெறும் ஐந்து நிமிடங்களில் கிராஸ்பாரைத் தட்டினார். கோன்சலஸ் அடுத்ததாக ஒரு வாய்ப்பைப் பெற்றார், ஆனால் அவரது நெருங்கிய முயற்சியை மரியானா பெனாவிடஸ் திறம்பட தடுத்தார்.
ஸ்பெயின் அடுத்த புதன்கிழமை ஜாம்பியாவை எதிர்கொள்ள உள்ளது, அதே நேரத்தில் கோஸ்டாரிகா ஜப்பானை எதிர்கொள்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |