FIFA உலகக் கோப்பை 2022: ஆட்டத்தின் பாதி நேரத்தில் எதிரணி வீரருடன் ஜெர்சியை மாற்றிக் கொண்ட குரோஷிய கேப்டன்!
சனிக்கிழமையன்று நடந்த பிரேசில் vs குரோஷியா FIFA உலகக் கோப்பை 2022 காலிறுதிப் போட்டியின் போது, கேஸ்மிரோ மற்றும் லூகா மோட்ரிக் இருவரும் தங்கள் ஜெர்சிகளை பாதி நேரத்தில் மாற்றிக்கொண்டனர்.
ஐந்து முறை FIFA உலகக் கோப்பையை வென்ற பிரேசிலை சனிக்கிழமையன்று பெனால்டியில் குரோஷியா 4-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
சட்டையை மாற்றிக்கொண்ட எதிரணி வீரர்கள்
இருப்பினும், ஆட்ட இடைவேளையின் போது குரோஷியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிக் (Luka Modric) பிரேசிலின் கேசெமிரோவுடன் (Casemiro) தனது சட்டையை மாற்றிக் கொண்ட ஒரு அரிய நிகழ்வு இடம்பெற்றது.
கால்பந்து போட்டிகளில் ஆட்டத்திற்குப் பிறகு வீரர்கள் சட்டைகளை மாற்றிக்கொள்வது பொதுவானது என்றாலும், இருவரும் ரியல் மாட்ரிட் கிளப்பில் ஒன்றாக விளையாடியதால் பாதி நேரத்தில் தங்கள் ஜெர்சியை மாற்றிக்கொண்டனர்.
Getty images
ஒரே கிளப்
மோட்ரிக் 2012-ல் ரியல் மாட்ரிட்டில் சேர்ந்தார் மற்றும் ஜினடின் ஜிதேன் (Zinedine Zidane) பயிற்சியாளராகப் பொறுப்பேற்றபோது, கேசெமிரோ மற்றும் டோனி க்ரூஸ் ஆகியோருடன் இணைத்து வெற்றிகரமான மிட்ஃபீல்ட் மூவரையும் உருவாக்கினார்.
ஜிதேனின் கீழ், ரியல் மாட்ரிட் தொடர்ந்து மூன்று UEFA சாம்பியன்ஸ் லீக் பட்டங்களை வென்றது, மோட்ரிக், கேசெமிரோ மற்றும் க்ரூஸ் ஆகியோர் பல ஆண்டுகளாக முக்கிய பங்கு வகித்தனர்.
ஒருவரையொருவர் எதிர்த்து போட்டி
எனவே, அவர்களின் வெளிப்படையான நெருக்கமான பிணைப்பைக் கருத்தில் கொண்டு, எதிராணியினராக இருந்தாலும் மோட்ரிக் மற்றும் கேசெமிரோ இருவரும் பாதி நேரத்தில் தங்கள் சட்டைகளை மாற்றிக்கொண்டனர். அவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டிப்போடுவது இதுவே முதல்முறை.
Reuters
மொத்தம், நான்கு சாம்பியன்ஸ் லீக் பட்டங்கள் உட்பட மொத்தம் 18 கோப்பைகளை இருவரும் வென்றனர். கேசெமிரோ சமீபத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு சென்றார், இதனால் மோட்ரிக் மற்றும் க்ரூஸ் உடனான அவரது 9 ஆண்டு கூட்டாண்மை முடிவுக்கு வந்தது.
காசெமிரோ தனது பெனால்டியை அடித்தபோதும், பந்தை எடுத்து நேராக மோட்ரிச்சிடம் ஒப்படைத்தபோதும் அவர்களது சகோதரத்துவம் தெரிந்தது.
Getty images
இறுதியில், பெனால்டி ஷூட் அவுட் முறையின் மூலம் குரோஷிய அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. இந்நிலையில், குரோஷியா அணி (கத்தார் நேரப்படி) டிசம்பர் 13-ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில், இவானா நோல் தனது தேசத்தை உற்சாகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கிறது.