FIFA உலக்கோப்பை: அர்ஜென்டினா வானத்தில் பிறந்த ராட்சத மெஸ்ஸி ஜெர்சி!
அர்ஜென்டினாவில் ஹெலிகாப்டர் மூலம் வானத்தில் பறக்கவிடப்பட்ட ராட்சத ஜெர்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகிவருகின்றன.
கத்தார் 2022 FIFA உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியை முன்னிட்டு, அர்ஜென்டினா அணிக்கு அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் மெஸ்ஸியின் 'எண் 10' பொறிக்கப்பட்ட ராட்சத ஜெர்சி விண்ணில் பறக்கவிடப்பட்டுள்ளது.
இந்த ராட்சத ஜெர்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன.
கத்தாரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 22-வது உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணிக்கு எதிராக மெஸ்ஸியின் அர்ஜென்டினா போட்டியிடுகிறது.
இந்நிலையில், மெஸ்ஸியின் அணியின் மூலம் நாட்டுக்கு அதிர்ஷ்டம் வந்து சேரும் என பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் அர்ஜென்டினா ரசிகர்கள், அணிக்கு அர்ப்பணிக்கும் வகையில் 39 அடி அகலம் 59 அடி உயரம் (12 மீட்டர் அகலம் 18 மீட்டர் உயரம்) கொண்ட ஜெர்சியை பறக்கவிட்டுள்ளனர்.
A helicopter carrying a giant Lionel Messi shirt was spotted flying over Rosario, Argentina.??? pic.twitter.com/MUXAbKq0ER
— Muhannad Jamal (@JamalMuhannad) December 15, 2022
ஏற்கெனவே, 1978 மற்றும் 1986 ஆகிய இரண்டு FIFA உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா, அதேபோன்று இரண்டு முறை சாம்பியனும், நடப்பு சாம்பியனுமான பிரான்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது உலக்கோப்பை பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது.