உலகக் கோப்பை கால்பந்து: ரவுண்ட் ஆஃப் 32 சுற்று: ஜப்பானை 1-2 என வீழ்த்திய பிரேசில்
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஜப்பான் - பிரேசில் அணிகள் பலப்பரீட்சை
ஹூஸ்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் ஜப்பான் மற்றும் பிரேசில் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் ஜப்பான் அணியின் கிஷூ சனோ தனது அணிக்கான முதல் கோலை அடித்து கணக்கை தொடங்கினார்.

பிரேசில் அணி பதில் கோல் அடிக்க தீவிரமாக முயற்சித்தாலும் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் ஜப்பான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று நின்றது.
\பிரேசில் வெற்றி
ஜப்பான் அணியின் கோலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் தீவிரமாக விளையாடிய பிரேசில் அணியில் கேப்ரியல் மகல்ஹெல் என்ற வீரர் 56வது நிமிடத்தில் கோல் அடித்து போட்டியை மேலும் தீவிரப்படுத்தினார்.

இருப்பினும் இரண்டு அணிகளாலும் ஆட்ட நேரத்தின் முடிவில் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை என்ற உடன் போட்டியின் நேரம் கூடுதலாக சேர்க்கப்பட்டது.
கடைசி நேரத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட பிராசில் அணியில் ப்ரூனோ குய்மரிஸ் மற்றுமொரு கோலை அடித்து பிரேசில் அணியின் வெற்றிக்கு உதவினார்.
இறுதியில் ஆட்டத்தில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வென்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |