உலகக் கோப்பை கால்பந்து: ஆஸ்திரியாவை 0-3 என வீழ்த்திய ஸ்பெயின் அணி: 2010க்கு பிறகு மீண்டும் வெற்றி
2026 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரியாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி முன்னேறியுள்ளது.
ஸ்பெயின் அபார வெற்றி
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரியாவை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி ஆஸ்திரியா வீரர்களை திணறடித்தது.
ஆட்டத்தின் 36 வது நிமிடத்தில் ஸ்பெயினின் மிக்கேல் ஒயார்சபால் சிறப்பான கோல் ஒன்றை அடித்து அசத்தினார்.

இரண்டாவது பாதியில் 66 வது நிமிடத்தில் பெட்ரோ போரோ மற்றும் ஆட்டத்தின் 89 வது நிமிடத்தில் ஒயார்சபால் மற்றொரு கோலும் அடித்து அசத்தினார்.
இதன் மூலம் ஸ்பெயின் அணி தன்னுடைய வெற்றியை 3-0 என்ற கணக்கில் உறுதிப்படுத்தியது.
அத்துடன் காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு ஸ்பெயின் அணி முன்னேறியுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டுக்கு பிறகு நாக் அவுட் சுற்றில் வெற்றி பெற்று ஸ்பெயின் அணி மீண்டும் முத்திரை பதித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |