போட்டியில் வெற்றி பெற எதிரணி வீரர்களுக்கு கத்தார் லஞ்சம்! கால்பந்து உலக கோப்பை தொடரில் வெடிக்கும் சர்ச்சை
கத்தாரில் நடைபெற்று வரும் 2022ம் ஆண்டின் உலக கோப்பை கால்பந்து தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெறுவதற்காக கத்தார் அணி ஈக்வடார் அணிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கத்தார் கால்பந்து உலக கோப்பை
உலக கால்பந்து ரசிகர்கள் அனைவரின் கவனமும் தற்போது கத்தாரில் தொடங்கி இருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து தொடரின் மீது குவிந்துள்ளது.
ஆசியாவில் இரண்டாவது முறையும், மத்திய கிழக்கு பகுதிகளில் நடக்கும் முதல் உலக கோப்பை கால்பந்து தொடராகவும் கத்தாரில் தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடர் பார்க்கப்படுகிறது.
வெடிக்கும் சர்ச்சைகள் கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தார் நாட்டில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு சர்ச்சை குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெடித்து வருகிறது.
FIFA World Cup Qatar 2022 Fireworks Opening
— Tansu YEĞEN (@TansuYegen) November 18, 2022
pic.twitter.com/jRMd18vwKx
கால்பந்து தொடரை நடத்த உலக கால்பந்து கூட்டமைப்பான பீபாவுக்கு கத்தார் லஞ்சம் கொடுத்ததாகவும், அதனடிப்படையிலேயே இதுவரை உலக கோப்பையில் களமிறங்காத கத்தார் நாட்டுக்கு உலக கோப்பை நடத்த அனுமதி வழங்கப்பட்டதாக வெளிவரும் குற்றச்சாட்டுகள் உலக கால்பந்து ரசிகர்களை உலுக்கி வருகிறது.
அத்துடன் மதுபானத்துக்கு தடை, மனித உரிமை மீறல் விவகாரம், தீவிர ஆடை கட்டுப்பாடு போன்றவை மேற்கத்திய நாடுகளின் விமர்சனத்திற்கு தொடர்ந்து உள்ளாகி வருகிறது.
முதல் வெற்றிக்காக கத்தார் லஞ்சம்
இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியில் தொடங்கி உள்ள உலக கோப்பை கால்பந்து தொடரில் முதல் போட்டியில் கத்தார் மற்றும் ஈக்வடார் அணிகள் மோதின, சொந்த மண்ணில் நடைபெறும் இந்த போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்திட வேண்டும் என்பதற்காக கத்தார், ஈக்வடார் அணி வீரர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்தாக எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Qatar vs Ecuador,Live Stream HD
— FIFA 2022 WORLD CUP Live (@ffworldcup22) November 20, 2022
FIFA World Cup Qatar 2022
2022 FIFA World Cup
Ecuador vs Qatar
FIFA World cup 2022 live
If Stream Stops⤵️?
??? ????➡️ https://t.co/s2f8j4sbJT
Follow @ffworldcup22 To Update Stream pic.twitter.com/qqEMiA4EpH
இது தொடர்பாக சவுதி அரேபியாவில் உள்ள பிரிட்டிஷ் மையத்தின் பிராந்திய இயக்குநரான அம்ஜத் தாஹா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கத்தார் முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று எட்டு ஈக்வடார் அணி வீரர்களுக்கு 7.4 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுக்க முன்வந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதனை ஐந்து கத்தார் நாட்டினரும், ஈக்வடார் நாட்டினரும் உறுதிப்படுத்தியதாக தெரிவித்த அவர், இதனை தவறான தகவல் என்றே நாங்கள் நம்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு முடிவை பாதிக்கும் என்று நம்பினாலும், பிபா ஊழை எதிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.