FIFA உலகக்கோப்பையில் முதல்முறையாக பெனால்டி ஷூட் அவுட்! ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்கு சென்றது குரோஷியா
கத்தாரில் நடைபெற்று வரும் FIFA உலகக் கோப்பையில் திங்கட்கிழமை நடந்த ஜப்பான் மற்றும் குரோஷியா அணிகளுக்கு இடையேயான போட்டி டையில் முடிந்ததால், பெனால்டி ஷூட் அவுட்டில் குரோஷியா அணி வெற்றி பெற்றது.
கடைசி நிமிடங்களில்..
ஜப்பான் மற்றும் குரோஷியா அணிகள் மோதிய இன்றைய ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில், 43வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் டைஸன் மேடா (Daizen Maeda) கோல் அடித்தார்.
அதையடுத்து 55-வது நிமிடத்தில் குரோஷியாவின் இவான் பெரிசிக் (Ivan Perisic) கோல் அடித்து சமன் செய்ய, அதன்பின்னர் இரு அணிகளும் கடுமையாக போராடியும் ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 1-1 என முடிந்தது.
கூடுதல் நேரம்
இதையடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் இரு அணிகளால் கோல் அடிக்க முடியவில்லை. அதனால் மீண்டும் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், அதிலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
பெனால்டி ஷூட் அவுட்
மொத்தமாக 120 நிமிடம் ஆட்டம் முடிந்த பின், வேறு வழியின்றி வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது.
கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கோப்பையில் பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்ட முதல் போட்டி இதுவாகும்.
இரு அணிகளுக்கும் தலா 5 பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது. அதில் முதல் 4 வாய்ப்பில் ஜப்பான் ஒரேயொரு கோல் மட்டுமே அடிக்க, குரோஷியா 3 கோல் அடித்து அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றது.
தொடர்ந்து ஜப்பானின் மூன்று பெனால்டி ஷூட்களை கோல் போஸ்டில் தடுத்து ஹாட்ரிக் சேவ் செய்த கோல் கீப்பர் Dominik Livaković ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பெனால்டி ஷூட்அவுட் 3-1 என குரோஷியாவுக்கு சாதகமாக முடிந்தது. இதன்மூலம் ஜப்பான் அணி தொடரை விட்டு வெளியேறியது.
HNS
Getty Images