FIFA உலகக்கோப்பை கத்தார்: காலிறுதி போட்டிக்கு நுழைந்த அணிக்கு அபராதம்
கனேடிய கோல்கீப்பரை ரசிகர்கள் துஷ்பிரயோகம் செய்ததற்காக குரோஷியாவுக்கு FIFA அபராதம் விதித்துள்ளது.
குரோஷியாவுக்கு ஃபிஃபா அபராதம்
கடந்த மாதம் கத்தாரில் நடந்த இரு நாடுகளின் குரூப்-ஸ்டேஜ் மோதலின் போது, கனடாவின் கோல்கீப்பரை குரோஷியா ஆதரவாளர்கள் துஷ்பிரயோகம் செய்ததற்காக உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியாளர்களான குரோஷியாவுக்கு ஃபிஃபா அபராதம் விதித்துள்ளது.
நவம்பர் 27 அன்று நடந்த ஆட்டத்தில் குரோஷியாவின் ரசிகர்களின் நடத்தை தொடர்பாக குரோஷிய கால்பந்து கூட்டமைப்புக்கு 50,000 சுவிஸ் பிராங்குகள் ($53,000) அபராதம் விதித்துள்ளதாக உலக கால்பந்து நிர்வாகக் குழு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
செர்ப்ஸ் இனக்குழுவைக்குச் சேர்ந்த கனேடிய கோல்கீப்பர் மிலன் போர்ஜன்
தோஹாவில் உள்ள கலீஃபா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது, குரோஷியாவில் பிறந்து சிறுவயதில் நாட்டை விட்டு வெளியேறிய செர்பிய இனத்தைச் சேர்ந்த மிலன் போர்ஜனை (Milan Borjan) குரோஷிய ஆதரவாளர்கள் திட்டியதாகக் கூறப்படுகிறது.
குரோஷியாவின் சுதந்திரப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த 1995 இராணுவ நடவடிக்கையின் போது குரோஷியப் படைகளால் கைப்பற்றப்பட்டபோது, அவரும் அவரது குடும்பத்தினரும் தங்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறினர்.
"ஆபரேஷன் ஸ்டாம்" என்று பெயரிடப்பட்ட சூழ்ச்சியின் போது மற்றும் அதற்குப் பிறகு, 200,000 செர்ப்ஸ் இனக்குழுவினர் (Serbs-Ethnic group) நாட்டை விட்டு வெளியேறினர்.
Frank Gunn/Canadian Press
குரோஷியா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றபோது, அதன் ரசிகர்கள் போர்ஜனை இழிவுபடுத்தும் விதமாக முழக்கமீட்டனர்.
செர்பியா, சவுதி அரேபியாவுக்கும் அபராதம்
நவம்பர் 24 அன்று பிரேசிலுக்கு எதிரான குழு-நிலை ஆட்டத்தின் போது, அண்டை நாடான கொசோவோவை சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய கொடிக்காக, செர்பியாவின் கால்பந்து அணிக்கு 20,000 சுவிஸ் பிராங்குகளுக்கு ($21,200) FIFA புதன்கிழமை அபராதம் விதித்தது.
FIFA-வின் ஒழுங்குமுறைக் குழு சவூதி அரேபிய கால்பந்து சங்கத்திற்கு தவறான நடத்தைக்காக 30,000 சுவிஸ் ஃப்ராங்க்கள் ($32,000) அபராதம் விதித்ததுள்ளது.
செர்பியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரு அணிகளும் உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. FIFA விதித்த அபராதத்திற்கு இரு நாட்டு கால்பந்து நிர்வாகக் குழுவிடமிருந்தும் உடனடி பதில் இல்லை.