FIFA உலக கோப்பையில் ஆதிக்கம் செலுத்தும் மெஸ்ஸி! அர்ஜென்டினா அணி காலிறுதிக்கு முன்னேற்றம்
கத்தார் உலக கோப்பை தொடரில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அர்ஜென்டினா அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
அர்ஜென்டினா, அவுஸ்திரேலிய அணிகள் மோதல்
கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பின் உச்சத்தை தொட்டுள்ளது. நள்ளிரவு 12.30 மணிக்கு அகமது பின் அலி ஸ்டேடியத்தில் நடந்த நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினா, அவுஸ்திரேலிய அணிகள் மோதின.
தொடக்கம் முதல் அர்ஜென்டினா அணி சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் மெஸ்சி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் அந்த அணி 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியின் 57-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் ஜூலியன் அல்வாரெஸ் ஒரு கோல் அடித்தார்.
Argentina secure their spot in the Quarter-finals! ?@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) December 3, 2022
அர்ஜென்டினா அபார வெற்றி
77-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் என்சோ பெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்தார். இறுதியில், அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய்து.
இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு அர்ஜென்டினா அணி தகுதி பெற்றிருக்கிறது. இந்தாண்டு உலக கோப்பை தொடரில் மெஸ்ஸி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
?? The Quarter-finals await...#FIFAWorldCup | #Qatar2022 pic.twitter.com/S7EKoQ4GVB
— FIFA World Cup (@FIFAWorldCup) December 3, 2022