மெஸ்ஸியின் கையில் குழந்தையாக லாமின் யாமல்: 20 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை! வைரல் புகைப்படம்
மெஸ்ஸி கையில் குழந்தையாக இருந்த லாமின் யமால் இன்று அவருக்கு எதிராகவே உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் விளையாட இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
லாமின் யமாலை கையில் ஏந்திய மெஸ்ஸி
உலக எதிர்பார்த்து காத்திருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியும் ஸ்பெயின் அணியும் மோதவுள்ளன.
அர்ஜென்டினா அணியின் நம்பிக்கை நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸிக்கும்(Lionel Messi), ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரமான லாமின் யமாலுக்கும்(Lamine Yamal) இடையிலான விளையாட்டை காண ஒட்டு மொத்த கால்பந்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை தூண்டியுள்ள இந்த மோதல், நம்மை 2007ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வு ஒன்றுக்கு அழைத்து செல்கிறது.
20 வயது இளம் வீரராக பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த லியோனல் மெஸ்ஸி, Diario Sport என்ற பத்திரிக்கைகாக UNICEF தொண்டு நிறுவனத்தின் புகைப்பட நிகழ்வில் கலந்து கொண்டார்.

அதில் மெஸ்ஸி குழந்தை ஒன்றை குளிப்பாட்டி தன் கையில் தாங்கியிருப்பது போன்ற அழகான புகைப்படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 20 ஆண்டுகளாக இந்த புகைப்படம் யாருக்கும் தெரியாமல் இருந்த வந்த நிலையில், கடந்த 2024ம் ஆண்டு யமாலின் தந்தை தன்னுடைய சமூக ஊடகங்களில் வெளியிட்ட பிறகு தான் உலக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆம். மெஸ்ஸி குளிப்பாட்டி புகைப்படம் எடுத்து கொண்ட குழந்தை, இன்று பார்சிலோனா அணியின் மிகச் சிறந்த இளம் வீரராக உருவெடுத்துள்ள லாமின் யாமல் தான்.

2026 உலகக் கோப்பை கால்பந்து
2026 உலகக் கோப்பை கால்பந்து அதன் உச்சக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கால்பந்து உலகின் ஜாம்பவானாக பார்க்கப்படும் லியோனல் மெஸ்ஸியை, அவர் கையில் சிறிய குழந்தையாக இருந்த லாமின் யமால் நேருக்கு நேர் மோதவுள்ளார்.
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி வெறும் போட்டி மட்டுமல்ல. கால்பந்து விளையாட்டின் ஆளுமையும், கால்பந்து விளையாட்டின் எதிர்காலமும் சங்கமிக்கும் ஒரு நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |